fbpx

’மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது’..!! முதல்வர் முக.ஸ்டாலின் கடும் விமர்சனம்..!!

மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது. தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? என முதலமைச்சர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 20 நாட்களே உள்ளன. பரப்புரைக்கு 18 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ”பிரதமர் மோடி அவர்களே… கருப்புப் பணம் மீட்பு, மீனவர்கள் பாதுகாப்பு, 2 கோடி வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு போல் காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்று தான், அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு.

விமானங்களில் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ, ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை. ‘எங்கும் இந்தி! எதிலும் இந்தி!’ என மாற்றியது தான் மோடி அரசின் அவலச் சாதனை! தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்! என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Read More : ’பத்திரிகையாளரையே சந்திக்க பயப்படும் மோடியிடம் வீரத்தை பற்றி பேசி என்ன பயன்’..!! விளாசிய கமல்..!!

Chella

Next Post

மழை வெள்ளத்தின்போது திமுக அரசு வழங்கிய 6000 ரூபாயில், 5400 மத்திய அரசு கொடுத்தது..!! அண்ணாமலை ஒரே போடு..!!

Sat Mar 30 , 2024
மத்திய சென்னையில் பாஜக சார்பில் போட்டியிடும் வினோஜ் பி.செல்வத்தை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஒரு பெரிய அரசியல் புரட்சி சென்னையில் நடந்து வருகிறது. சென்னையில் தி.மு.க. கோட்டை உடைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. எம்.பி.யாக இருக்க தகுதி இல்லாதவர் தயாநிதி மாறன். பில்கேட்ஸ்க்கு சமமாக இருக்கும் குடும்பம் கோபாலபுரத்துக்கு பக்கத்தில் உள்ள குடும்பம். கோடிக்கணக்கான ஊழல். தனது சகோதரர் நிறுவனத்துக்காக […]

You May Like