fbpx

ஓய்வு முடிவை திரும்ப பெற்ற மொயின் அலி!… ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சேர்ப்பு!… காரணம் என்ன தெரியுமா?

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை திரும்ப பெற்றார் இங்கிலாந்து மொயீன் அலி. இதனால், முதல் 2 ஆஷஸ் போட்டிகளுக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மொயீன் அலி சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த 2021-ல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற மொயீன் அலி, தனது முடிவை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்த நிலையில், தனது முடிவை மாற்றிக்கொண்டு, டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் திரும்பினார் இங்கிலாந்து வீரர் மொயீன் அலி. இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து தொடருக்குப் பிறகு செப்டம்பர் 2021-இல் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதிலிருந்து மொயீன் முதல்தரப் போட்டியில் விளையாடவில்லை. அவர் ஓய்வு பெற்றதிலிருந்து, இங்கிலாந்துடன் டி20 உலகக் கோப்பையையும், சென்னை சூப்பர் கிங்ஸுடன் 2 ஐபிஎல் பட்டங்களையும் வென்றுள்ளார்.

காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய ஜாக் லீச்சிற்கு மாற்றாக மொயின் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஷ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, வரும் 16ம் தேதி எக்பாஸ்டனில் தொடங்க உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஷ் தொடர், கிரிக்கெட் உலகின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடராக கருதப்படுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தொடர் கடந்த 1882ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 72 முறை ஆஷஷ் தொடர் நடைபெற்றுள்ள நிலையில், ஆஸ்திரேலியா 34 முறையும், இங்கிலாந்து அணி 32 முறையும் தொடரை கைப்பற்றியுள்ளது. 6 முறை தொடர் சமனில் முடிந்துள்ளது. கடைசியாக நடைபெற்ற ஆஷஷ் தொடரில் ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியது.

ஆஷஷ் தொடருக்கான இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜொனாதன் பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், ஜாக் க்ராலி, பென் டக்கெட், டான் லாரன்ஸ், ஆலி போப், மேத்யூ பாட்ஸ், ஆலி ராபின்சன், ஜோ ரூட், ஜோஷ் டங்கு, கிறிஸ் வூக்ஸ்.

35 வயதான மொயின் அலி இதுவரை 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். நடப்பாண்டு ஆஷஷ் தொடரின் முதல் போட்டியில் மொயின் அலி விளையாடினால், அது அவருக்கு 64வது போட்டியாகும். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அவர் 2,914 டெஸ்ட் ரன்களையும், டெஸ்ட் அளவில் 195 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய மொயின் அலி, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என எதிலுமே பெரிதாக சோபிக்கவில்லை. இந்த சூழலில் தான், அவர் டெஸ்ட் போட்டியில் விளையாட இங்கிலாந்து அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அதேநேரம், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அவர் ஏற்கனவே தொடர்ந்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!… கருப்புப் பட்டை அணிந்து விளையாடும் வீரர்கள்!

Thu Jun 8 , 2023
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரு நாட்டு அணி வீரர்களும் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, ஹெட்-ஸ்மித் அபார […]

You May Like