fbpx

’மோகன்லால் என் வீட்டு கிச்சன் வரைக்கும் வந்து’..!! ’இப்போ அவரு மேல மரியாதையே இல்ல’..!! நடிகை சாந்தி பகீர் தகவல்..!!

நடிகர் மோகன்லாலுக்கு நன்றியே இல்லை என பிரபல நடிகை சாந்தி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த சாந்தி வில்லியம்ஸ் தன்னுடைய 12 வயதில் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர், 2001இல் சித்தி தொடரின் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். மறைந்த பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸை 1979ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சாந்திக்கு, 4 குழந்தைகள் உள்ளனர். வில்லியம்ஸ் உடல்நலக்குறைவால் காலமானார்.

அதேசமயம் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் சாந்திக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சின்னத்திரை, வெள்ளித்திரை என இரு தளங்களிலும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார். இவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசுகையில், நடிகர் மோகன்லாலை தாறுமாறாக விமர்சித்துள்ளார். அதாவது, ”மோகன்லாலுக்கு நிறைய சமைத்து கொடுத்திருக்கிறேன். ஆனால், அவருக்கு நன்றியே இல்லை. தவறாக நினைத்து கொள்ள வேண்டாம். என்னுடைய கணவர் வில்லியம்ஸ் அவ்வளவு பெரிய கேமரா மேன்.

அவர் தொழில் ரீதியாக சிறப்பானவர். மோகன்லாலின் இரண்டாவது படமாக ‘ஹலோ மெட்ராஸ் கேர்ள்’ வெளியானது. அந்த படத்தில் மோகன்லால் வில்லனாக நடித்தார். இது எங்களுடைய படம். பூர்ணிமா பாக்யராஜ், ஊர்வசி ஆகியோரும் நடித்திருப்பார்கள். எங்கள் வீட்டுக்கு வந்தால் நேரடியாக சமையலறைக்கு சென்று மீன் செய்து கொடுக்க சொல்லுவார். அவரே கேரியர் எல்லாம் கொண்டு வந்து சாப்பாடு வாங்கிச் செல்வார். என் கணவர் இறந்தப்ப வரவே இல்லை. உலகத்துக்கே பிடித்த மோகன்லாலை எனக்கு சுத்தமாக பிடிக்காது.

வில்லியம்ஸ் அவரை வைத்து 4 படங்கள் பண்ணினார். நான் நிறை மாதம் கர்ப்பிணியாக இருந்தபோது மோகன்லாலுக்கு காசு கொடுக்க என் நகையெல்லாம் விற்று கொடுத்தேன். என் கணவர் லால்..லால் என அவரையே சுற்றி சுற்றி வந்தார். ஆனால், இவரோ ஏர்போர்ட்டில் என்னை பார்த்து தலைதெறிக்க ஓடினார். இவனுக்கு என்னைக்குமே என்கிட்ட மரியாதை கிடையாது” என்று கடுமையாக விமர்சித்தார்.

Read More : வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ்..!! அசத்தும் மின்சார ஆட்டோ..!! வாங்கப்போறீங்களா..? விலையை தெரிஞ்சிக்கோங்க..!!

Chella

Next Post

’விஜய்க்கு அரசியல் தெரியாது’..!! ’த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் மட்டும் தான் தெரியும்’..!! காட்டமாக விமர்சித்த பத்திரிகையாளர்..!!

Fri May 17 , 2024
பொது வாழ்க்கையில் இறங்கிவிட்டால், அனைத்தையும் சந்தித்து தான் ஆக வேண்டும் என்பதற்கு ஏற்ப விஜய் அரசியலில் இறங்கியதும் ஒவ்வொருவரும் வாய்க்கு வந்தபடி பேசி வருகின்றனர். அந்த வகையில், பத்திரிகையாளர் பாண்டியன் விஜய்யின் அரசியல் வாழ்க்கை பற்றி அசிங்கமாக பேசியிருக்கிறார். அதாவது, விஜய்க்கு முதலமைச்சர் ஆவதற்கு என்ன தகுதி இருக்கிறது. தகுதியும் இல்லை, அறிவும் இல்லை வெறும் புஸ்ஸி ஆனந்தை வைத்து அரசியலில் ஜெயித்து விடலாம் என்று கனவு கண்டு வருகிறார். […]

You May Like