மோகன்லால், இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர். பெரும்பாலும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இவர், ஒன்பது முறை கேரள மாநில அரசு விருதையும் பத்து முறை ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்றிருக்கிறார். தேசிய அளவில், மிகச்சிறந்த நடிகர் விருதிற்கான மிகவும் அதிகமான பரிந்துரைகள் பெற்ற ஒரே நடிகர் இவரேயாவார். திரை துறையில் இத்தனை புகழ் பெற்ற மோகன்லாலின் மகன், பிரணவ் மோகன்லால். 2002 ஆம் ஆண்டு, ஒன்னமன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் அறிமுகமானவர் இவர்.
தொடர்ந்து புனர்ஜனியில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து, சிறந்த குழந்தை நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார். 2018 ஆம் ஆண்டு வெளியான ஆதி திரைப்படத்தில் அவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த அறிமுக நடிகருக்கான SIIMA விருதை வென்றார். இது மட்டும் இல்லாமல், “ஜிப்ஸி வுமன்” பாடலை எழுதி, பாடியதன் மூலம், அவர் பாடகராகவும், பாடலாசிரியராகவும் அறிமுகமானார்.
இந்நிலையில், இவர் தற்போது ஸ்பெயின் நாட்டில் உள்ள பண்ணையில் சம்பளம் ஏதுமின்றி பணி செய்து வருவதாக அவரது அம்மா சுசித்ரா மோகன்லால் தெரிவித்துள்ளார். இவர் இத்தனை யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். ‘பிரணவ் (அப்பு), இப்போது ஸ்பெயின் நாட்டில் உள்ள பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக அவர் சம்பளம் ஏதும் பெறவில்லை. அதற்கு பதிலாக அங்கு தங்குவதற்கு இடமும், உணவும் பெறுகிறார். அங்கு அவர் குதிரை, ஆடு போன்றவற்றை கவனித்துக் கொள்கிறார். அது அவருக்கு ஒரு புது அனுபவமாக உள்ளது. பயணம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் அவர் தனது அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொள்வார், என்று அவரது தாய் கூறியுள்ளார்..
Read more: காதல் மனைவியை 8 துண்டுகளாக வெட்டிய கணவன்; திருவண்ணாமலையை உலுக்கிய கொடூர சம்பவம்!!!