fbpx

“மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா”!… இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்!

ஒவ்வொரு வீட்டிலும் பெண்பிள்ளையை தேவதைகளாக நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஏன் இந்த உலகம் முழுவதும் பெண்ணின் அடையாளத்தை தேவதையாக வர்ணிக்கின்றது. ஆனால் அதே சமூகம் தான்  தேவதைகளுக்கு பல இன்னல்களையும் தருகின்றது அவர்களுக்கான உரிமைகளையும் தர மறுக்கின்றது. பெண்களைப் பற்றி பெருமிதம் கொள்ளுங்கள். பெண் என்பவள், சுமையோ அல்லது கணவன் வீட்டிற்கான பெண் என்ற மனோபாவத்தை மாற்றவும். ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு இடையில் வேறுபாடு பார்க்காமல் சமத்துவத்தை மேம்படுத்தவும்.  

குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும்  உயர்வுக்கும் பெண் குழந்தைகள் காரணமாக இருக்கின்றார்கள் அவர்களைப் பாதுகாக்கவும் வாழ்வில் உயர்த்தவும் ஒவ்வொருவரின் கடமையாகும். பெண் குழந்தைகளுக்கான உரிமைகளை நிலைநாட்டவும் அவர்களுக்கான அதிகாரத்தை பெறவும் அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும் 2011 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும்அக்டோபர்  11-ஆம் நாள் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தடுத்து, பாலின சமத்துவமின்மையை குறைக்கவும், பெண் குழந்தைகளுக்கான உரிமையை நிலைநாட்டவுமே இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பாலின சமத்துவம், சகல துறைகளிலும் சமத்துவமான வாய்ப்பு, கல்வி உரிமை, பாதுகாப்பு, அங்கீகாரம், வளர்ச்சியை அதிகரித்தல், வன்முறைகளை களைதல் போன்றனவற்றிற்கு சமூகம் ஒத்துழைப்புக் கொடுத்து இந்தப்பெண் குழந்தைகள் நினைத்ததை சாதிக்க உறுதுணையாக நின்று, இவர்கள் பின்னாளில் சாதனை பெண்களாக மிளிர வைக்கும் அவசியத்தை நினைவுகூரும் நாள்.

பெண் குழந்தைகள் பிறப்பு என்பது பெற்றோருக்கு ஏற்படும் பொருளாதார சுமை என்கின்ற கருத்தியலை மாற்றியமைக்கவும் இவ்வுலகில் உயிர்கள் ஒவ்வொன்றும் தோன்றவும் சுதந்திரமாய் வாழவும் இயற்கையான உரிமைகள் உள்ளன என்பதை அனைவரும் உணர்ந்திட வேண்டும். பட்டாம் பூச்சிகளாய் பறக்க நினைப்பவர்களுக்கு சிறகுகள் தரவில்லை என்றாலும், சிறைகளை தராமல் இருந்தால் பெண் குழந்தைகள் தங்களுடைய வாழ்வில் வானத்தை வசப்படுத்த காட்டுவர்.

இதை முன்னெடுத்து செல்லும் விதமாக இந்தியா உட்பட பல நாடுகளில் பெண்களுக்கான திட்டங்கள் என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்தியாவில் பெண் குழந்தை பாதுகாப்பிற்காகவும் ,அவர்களின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டும் செல்வமகள் சேமிப்பு கணக்கு, சுகன்யா சம்ரித்தி கணக்கு உள்ளிட்ட திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

பெண் சிசுக்கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த காலங்கள் எல்லாம் கடந்து , நாகரீக வளர்ச்சி அடைந்து அடுத்த கட்டத்தை எட்டியுள்ள இந்த காலகட்டங்களிலும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய முடியாத நிலைதான் நிலவி வருகிறது .இதை மாற்றவே ,ஆண் பிள்ளைகளுக்கு நிகராக பெண் பிள்ளைகளும் மதிக்கப்பட ,அவர்களுக்கான சுதந்திரத்தை பெற இந்த நாளில் உறுதியேற்போம் .

Kokila

Next Post

"stress" அதிகமா இருக்கா?? உடனே வெற்றிலை சாப்பிடுங்க.. வெற்றிலையில் இருக்கும் அற்புத மருத்துவ குணம்..

Wed Oct 11 , 2023
நமது முன்னோர், அடிக்கடி வெற்றிலை பாக்கு போடுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் தற்போது வெற்றிலை பாக்கு போடுவது அநாகரீக செயலாக பார்க்கப்படுகிறது. இதற்க்கு காரணம், வெற்றிலை பாக்கில் உள்ள நன்மைகள் பற்றி நமக்கு தெரிவதில்லை. பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு வைத்து சாப்பிடும்போது அது நல்ல சுவை தரும். அதே சமயம், அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது. ஆம், வெற்றிலை பாக்கு சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல […]

You May Like