fbpx

செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்கு.. தொடக்கத்தில் இருந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான கிரிமினல் வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் வசூலித்து ஏமாற்றியதாக கணேஷ் குமார், தேவசகாயம் ஆகியோர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். இதனால் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான செந்தில் பாலாஜியின் உதவியாளர் சண்முகம் தாக்கல் செய்த மனுவில், பாதிக்கப்பட்டவர்கள் பணம் கிடைத்து விட்டதாக கூறி சமரசமாக போக விரும்புவதாகவும் தெரிவித்தார். அதனை ஏற்று செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்கை ஐகோர்ட் ரத்து செய்தது. அதனை எதிர்த்து தர்மராஜ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, செந்தில்பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்கை ரத்து செய்யும் தீர்ப்பு செல்லாது என அறிவித்தது.

சமரசமாக செல்வது என்ற காரணத்திற்காக குற்ற வழக்குகளை விசாரிக்காமல் தவிர்க்க முடியாது என கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை ஆரம்பத்தில் இருந்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். வழக்கை தமிழக அரசு தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் விசாரணையை தொடர வேண்டும் எனவும் நீதிபதிகள், அப்துல் நசீர், போபண்ணா, ராமசுப்பிரமணியன் அமர்வு ஆணையிட்டுள்ளது.

Rupa

Next Post

’’உள்ளாடை வாங்கத்தான் நான் டெல்லிக்கு சென்றேன்’’ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்தின் சகோதர் சர்ச்சை பதில் ….

Thu Sep 8 , 2022
ஜார்கண்ட முதல்வர் ஹேமந்தின் சகோதரும் எம்.எல்.ஏ.வுமான பசந்த்சோரன் டெல்லிக்கு உள்ளாடைதான் வாங்க சென்றேன் என சர்ச்சைக்குரிய பதிலளித்துள்ளார். ஜார்கண்ட் மாநில சட்டப் பேரவையில் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து நம்பிக்கை தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து தனது கட்சிக்காரர்கள் , கூட்டணிக்கட்சிக்காரர்களின் ஒட்டு மொத்த வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் முதலமைச்சர்பதவியை தொடர்கின்றார். இந்நிலையில் அவரது சகோதரர் பசந்த் சோரன் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது விமான […]

You May Like