fbpx

பணம் மோசடி வழக்கு..! கைது செய்யப்பட்ட நடிகை ஜெயலட்சுமி சிறையில் அடைப்பு…!

கடந்த 2022-ம் ஆண்டு ‘சினேகம் பவுண்டேஷன்’ பெயரைப் பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து தன்மீது சினேகன் அவதூறு பரப்புவதாக கூறி நடிகை ஜெயலட்சுமியும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக இருவரும் மாறி மாறி காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இதனையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். நீண்ட நேரம் காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக திருமங்கலம் போலீசார், நேற்று நடிகை ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நடிகை ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார்.

Vignesh

Next Post

Polio Drop Camp: பெற்றோர்களே!… நாடுமுழுவதும் மார்ச் 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்!… மத்திய அரசு அறிவிப்பு!

Wed Feb 21 , 2024
Polio Drop Camp: நாடு முழுவதும் வரும் மார்ச் 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த அனைத்து மாநில சுகாதாரத்துறைக்கும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆண்டுதோறும் புதிதாக பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இரண்டு முறை வழங்கப்பட்டு வருகிறது. போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு போலியோ சொட்டு மருந்து முகாம்களை […]
பெற்றோர்களே மறந்துறாதீங்க..!! தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்..!!

You May Like