வீட்டில் மணி பிளான்ட் செடி வளர்த்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நமது வீண் விரயத்தை குறைத்து வீட்டில் சேமிப்பு அதிகரிக்க உதவக்கூடிய தன்மை கொண்டது மணி பிளான்ட்.
உங்கள் வீட்டில் மணி பிளான்ட் வைத்த பிறகும் கஷ்டம் வருவதைப் போல இருந்தால் சரியான திசையில் அதை வைக்கவில்லை என்பதுதான் அர்த்தம். வீட்டிற்கு வெளியில் மணி பிளான்ட் செடியை வைக்கக் கூடாது.
வீட்டிற்குள் வைத்து வளர்ப்பது தான் பலன் கொடுக்கும். ஒரு தொட்டி அல்லது கண்ணாடி குவளையில் இதை வளர்க்கலாம். நீல நிற அல்லது பச்சை நிற தொட்டியில் செடியை வைத்தால் நல்ல செல்வம் கொழிக்கும்.
எந்த காரணத்தை கொண்டும் வடகிழக்கு திசையில் மணி பிளான்ட் செடியை வைக்கவே கூடாது. ஏனெனில், இதன் மூலம் அதிகப்படியான நஷ்டம் ஏற்படும். புதன்கிழமையில் மணி பிளான்ட் செடியை வாங்கி வைத்தால் இரட்டை பலன் கிடைக்கும்.
புதிய செடி வாங்க முடியாத சிலர் மணி பிளான்ட் செடி வளர்ந்த பின்னர் அதனை கத்தரிக்கோலால் அல்லது கத்தியால் துண்டித்து எடுக்காமல் கையால் கிள்ளி எடுத்து மற்றொரு மணி பிளான்ட் செடியை வளர்க்க பயன்படுத்திக் கொள்ளலாம்.