fbpx

தந்தை வாங்கிய பணத்திற்கு 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கந்துவட்டிக்காரர்..!! கடனை திருப்பி தராததால் ஆத்திரம்..!!

பெங்களூரு நகரில் தந்தை வட்டிக்கு வாங்கிய தொகையை திருப்பி செலுத்தாததால் 17 வயது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு நகரின் மாதநாயகனஹள்ளி பகுதியைச் சேர்ந்த ஒருவர், வட்டி தொழில் செய்யும் ரவிக்குமார் (39) என்பவரிடம் ரூ.70,000 கடன் வாங்கியுள்ளார். மேலும், அவர் கடன் தொகையையும், வட்டியையும் திருப்பி செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக வட்டிக்கு பணம் கொடுத்த ரவிக்குமார், அந்த நபரிடம் தகராறு செய்திருக்கிறார்.

இந்நிலையில், 30,000 ரூபாய் மட்டுமே திருப்பிக் கொடுத்ததால் அந்த நபரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து தொல்லை கொடுத்துள்ளார் ரவிக்குமார். மேலும், வட்டி பணத்தை கொடுக்காததால் கடன் வாங்கிய நபரின் 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் அந்த சிறுமிக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து, அதை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை மீண்டும் பணம் கேட்டு வந்த ரவிக்குமார், வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக அந்த சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளி ரவிக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Read More : தீபாவளி ராக்கெட் போல் இனி பறக்கப் போகுது..!! தங்கத்தை இப்போவே வாங்கிருங்க..!! ஆனந்த் சீனிவாசன் பரபரப்பு தகவல்..!!

English Summary

A 17-year-old daughter was raped in Bengaluru after her father did not pay back the loan amount.

Chella

Next Post

வழக்கு தொடர்பாக வந்த பெண்ணின் வாழ்க்கையை கெடுத்த வக்கீல்..!! வீடியோ எடுத்து மிரட்டி பலமுறை பலாத்காரம்..!!

Wed Oct 23 , 2024
A woman from Nagercoil, Kanyakumari district, who was raped by a lawyer, has caused shock and excitement.

You May Like