fbpx

வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு குரங்கம்மை நோய்…? 27 வயது இளைஞர் தப்பி ஓட்டம்…! அமைச்சர் மா.சு தகவல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கு சிக்கன் பாக்ஸ் தொற்று இருப்பதாக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் உலகம் முழுவதும் குரங்கம்மை பரவி வருவதால், சென்னை, மதுரை, கோவை, திருச்சி விமான நிலையங்களில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் பரிசோதனை செய்யப்படுகின்றனர். சென்னை, திருச்சி, கோவை, மதுரை அரசு மருத்துவமனைகளிலும் சிறப்புபடுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் இருந்து 27 வயது இளைஞர் ஒருவர் கோவை விமானநிலையம் மூலமாக தமிழகம் வந்தடைந்தார்.

காய்ச்சல் மற்றும் குரங்கம்மை நோயில் இருக்கும் கொப்புளங்கள் அவருக்கு இருந்தன. திருச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதனையின் போது, அவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். பின்னர், திருவாரூர் அருகே உள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று காவல் துறையின் உதவியுடன் அவர் அழைத்து வரப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இருந்தது சிக்கன் பாக்ஸ் தொற்று என்பது பரிசோதனையில் உறுதியானது. ஆனாலும், மறு பரிசோதனைக்காக புனே ஆராய்ச்சி மையத்துக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. சென்னையில் 20 செ.மீ.க்கும் மேல் மழை பெய்துள்ளது. ஆனால், அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டதால், பெரிய அளவில் பாதிப்பு இல்லை. வடகிழக்கு பருவகாலம் முடியும் வரை முன்னேற்பாடு நடவடிக்கைகள், மருத்துவ முகாம்களை திரும்ப பெற கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

English Summary

Monkey measles in a foreigner

Vignesh

Next Post

ரூ.50,000 மானியம் வழங்கும் மத்திய அரசு..! யாரெல்லாம் இதற்கு விண்ணப்பிக்கலாம்...? முழு விவரம்

Sun Nov 3 , 2024
50,000 will be provided by the central government

You May Like