fbpx

பருவ மழை குறைவு!… 2016 போல மீண்டும் அதிதீவிர வறட்சி ஏற்படும் என எச்சரிக்கை!

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை குறைவால் கடும் வறட்சி ஏற்படும் என நீர் வளம் மேம்பாடு, வினியோக மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் 8ல் துவங்கியது. மாநிலத்தில் நேற்று வரை கடந்த மூன்று மாதங்களில் 48 சதவீதம் மழை குறைவு. ஜூன் முதல் ஆக.31 வரை சராசரி 1735.2 மி.மீ., மழை பெய்ய வேண்டும். இந்தாண்டு அதே கால அளவில் 909.5 மி.மீ., பதிவானது. இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, பாலக்காடு, கோட்டயம், திருச்சூர் ஆகிய ஆறு மாட்டங்களில் மழை சராசரி அளவில் 50 சதவீதம் குறைவாகும். பருவமழை குறைவால் மாநிலம் முழுவதும் அணைகள், ஆறுகள், நீர் நிலைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இனி வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு இன்றி போனால் 2016 போல கடும் வறட்சி ஏற்படும் என நீர் வளம் மேம்பாடு, வினியோகம் மையம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக ஆறு மாவட்டங்களில் அதிதீவிரமாகவும், எட்டு மாவட்டங்களில் கடுமையாகவும் வறட்சி நிலவும் என கூறப்பட்டுள்ளது. அதனை சமாளிக்க அரசு, தனி நபர்களும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தது. மாநிலத்தில் மற்ற மாவட்டங்களை விட இடுக்கியில் இந்தாண்டு 37 சதவீதம் மட்டும் மழை பெய்துள்ளதால் அதிதீவிர வறட்சிக்கு வாய்ப்புள்ளதை சுட்டிக் காட்டுவதாக மையம் நிர்வாக இயக்குனர் மனோஜ் பி. சாமுவேல் தெரிவித்தார். மேலும்,மாநிலத்தில் ஆக.28 வரை மழை இன்றி காணப்பட்ட நிலையில் ஓணம் பண்டிகையான ஆக.29 முதல் மழை பெய்து வருகிறது. 34 நாட்களுக்கு பிறகு சராசரி மழை 10 மி.மீ., மேல் பதிவானது. இம்மாதம் இறுதிவரை பருவமழைக்கான காலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் முக்கிய உத்தரவு..! சேதமடைந்த கட்டடங்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை..!

Fri Sep 1 , 2023
தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்துள்ள கட்டடங்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் முக்கியத்துவம் வாய்ந்த பொது இடங்களான பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், மருத்துவமனைகள், ஆரம்ப நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் இதர முக்கிய கட்டமைப்புகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இந்த முக்கியத்துவம் […]

You May Like