fbpx

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்; எதிர்க்கட்சிகளின் அமலியால் நாள் முழுவதும் ஒத்திவைப்பு…!

புதுடெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம் 12-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த தொடரில் 18 அமர்வுகள் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரைப் போல இப்பொழுதும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே சமயம் விலைவாசி உயர்வு, சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அக்னிபாத் திட்டம் ஆகிய விவகாரங்களை இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதேபோல் கடந்த மாதம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. விதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் சில பொருட்கள் மீது ஏற்கனவே விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. விகிதமும் மாற்றியமைக்கப்பட்டது. இந்த புதிய வரி விதிப்பு அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதன்படி, பேக்கிங் செய்யப்பட்ட, முன்கூட்டியே லேபிள் இடப்பட்ட பொருட்கள் மற்றும் பாக்கெட்டில் அடைத்து வைக்கப்படும் பிராண்ட் பெயர் இல்லாத அரிசி, பருப்பு போன்ற உணவு பொருட்களுக்கு முதல் முறையாக 5 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், நடப்பு கூட்டத்தொடரில் நாடாளுமன்ற மேலவையில் பணவீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. வரி விகித உயர்வு பற்றி அவையின் மைய பகுதிக்கு சென்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமரும்படி அவை தலைவர் கூறினார். இந்நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால், அவை தலைவரால், அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது

Baskar

Next Post

“ உலகில் முதலில் பிறந்த குரங்கு தமிழ் குரங்கு தான்.. ” முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..

Mon Jul 18 , 2022
தமிழ்நாடு நாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி மூலம் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் ” உலகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும், 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் வாழ்கின்றனர்.. இவர்களுக்கு தமிழ்நாடு தான் தாய்வீடு.. தமிழ்நாட்டில் கி.மு 6-ம் நூற்றாண்டிலேயே நகரமயமாக இருந்தது என்பதற்கு கீழடி தான் ஆதாரம்.. தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகள் பழமையானது.. உலகில் […]

You May Like