fbpx

Woww…! மாதம்தோறும் ரூ.7,500 உதவித்தொகை…! உடனே ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய வேண்டும்…! நாளை தேர்வு

UPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறுவதற்கு மதிப்பீட்டு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது அவசியம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் UPSC தேர்வு தயாராகும் மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறுவதற்கு மதிப்பீட்டு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது அவசியம் என அரசு தெரிவித்துள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மாதம்தோறும் 7,500 வீதம் பத்து மாதங்களுக்கு உதவி தொகை வழங்கப்படும்.

தமிழக மாணவர்கள் குடிமைப் பணிகளுக்கான தேர்வில் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக இந்த ஊக்கத்தொகை திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. அண்மையில் இந்த மதிப்பீட்டு தேர்வுகள் குறித்த அறிவிப்பு ஆன்லைன் மூலமாக வெளியிடப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இதற்கான தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களின் பதிவு எண் உள்ளிட்ட ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

Vignesh

Next Post

2 நிமிடத்தில் பான் கார்டில் திருத்தம் செய்யலாம்!… கட்டணம் எவ்வளவு?… முழு விவரம்!

Sat Sep 9 , 2023
பான் கார்டில் உள்ள விவரங்களில் பிழை ஏதேனும் இருந்தால் அதனை ஆன்லைன் மூலமாக எளிதில் எப்படி மாற்றலாம் என்பது குறித்து பார்க்கலாம். புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க மற்றும் திருத்தம் செய்ய www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். இந்த இணையதளப் பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தில் ‘Application Type’ -> ‘Changes or Correction in Existing PAN card’ என்பதைத் தேர்வு செய்யவேண்டும். பான் கார்டு திருத்தம் செய்வதற்கான […]

You May Like