fbpx

அதிகளவில் கர்ப்பம்..!! பெண் கைதிகளின் சிறைச்சாலைக்குள் ஆண் கைதிகள் நுழைய தடை..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

மேற்குவங்க மாநில சிறைச் சாலைகளில் பெண் கைதிகள் அதிகளவில் கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 196 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைகள் என்பது சீர்திருத்தத்திற்கானவைதான். ஆனால், சிறைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்றுள்ள சம்பவம் குறித்து சமூக சேவகர் அமிக்ஸ் க்யூரி’ கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவில், மேற்கு வங்க மாநில சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த இல்லங்களில் ஆயிரக்கணக்கான பெண் கைதிகள் தாங்கள் செய்த குற்றங்கள் மற்றும் வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், சமீபகாலமாக சிறைகளில் பெண் கைதிகள் அதிகளவில் கர்ப்பமாகின்றனர். இதுவரை 196 குழந்தைகள் சிறைச்சாலைகளிலேயே பிறந்துள்ளனர். எனவே, பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்குள் ஆண்கள் நுழைய தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். சிவஞானம், நீதிபதி சுப்ரதிம் பட்டாச்சார்யா தலைமையிலான அமர்வில் வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

சிறைகளில் சீர்திருத்தம் மற்றும் பெண் கைதிகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல், பெண் கைதிகளின் மறுவாழ்வு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், சிறைகளில் பெண் கைதிகள் அதிகளவில் கர்ப்பமாக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

இரவு முழுவதும் மீன்கள் உல்லாசம்..!! குழந்தைகள் கூட தூங்க முடியல..!! ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்..!!

Sat Feb 10 , 2024
அமெரிக்காவின் புளோரிடாவின் தம்பா விரிகுடா பகுதியில் வசிப்போருக்கு வினோதமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கு சில காலமாகவே இரவு நேரங்களில் ஏதோ ஒரு மர்மமான சத்தம் கேட்டு வந்துள்ளது. இதனால் குழந்தைகளால் தூங்கக் கூட முடியாத நிலை உருவானதாம். முதலில் இந்த சத்தம் எங்கிருந்து வருகிறது? எதனால் வருகிறது? என்று பலருக்கும் தெரியாமல் இருந்தது. சிலர் அருகே உள்ள ராணுவ தளத்தில் சீக்ரெட் ஆயுதங்களைச் சோதனை செய்வதாகவும் அந்தச் சத்தம் […]

You May Like