2024, பிப்ரவரியில், ஆர்பிஎஃப் நடவடிக்கை மூலம் 521-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு குடும்பத்தினருடன் ரயில்வே காவல்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
ரயில்வே சொத்து, பயணிகளுக்கான வசதிகள் மற்றும் பயணிகளின் நல்வாழ்வைப் பாதுகாப்பதில் ரயில்வே பாதுகாப்புப் படை உறுதியாக உள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படை 2024 பிப்ரவரி மாதத்தில், குழந்தை செல்வங்கள் மீட்பு எனும் நடவடிக்கை மூலம், பெற்றோர்களிடமிருந்து பிரிந்த குழந்தைகளை மீட்டதுடன், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் 521-க்கும் அதிகமான குழந்தைகளை அவர்களின் குடும்பங்களுடன் மீண்டும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஒப்படைத்தனர்.
“உயிர்களைக் காப்பது” என்ற நடவடிக்கையின் கீழ், நடைமேடைகள் மற்றும் ரயில் தடங்களில் சக்கரங்களுக்கு அடியில் பயணிகள் சிக்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஓடும் ரயில்களில் இருந்து இறங்கும்போது அல்லது ஏறும்போது தற்செயலாக விழுந்த 205 பயணிகள் காப்பாற்றப்பட்டனர்.
“பெண்கள் பாதுகாப்பு” முன்முயற்சியின் கீழ், 2024 பிப்ரவரி மாதத்தில் 228 “பெண்கள் பாதுகாப்பு” குழுக்கள் 10,659 ரயில்களில் 2.73 லட்சம் பெண் பயணிகளுக்குப் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கின. பெண் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் பயணித்த 7,357 பேர் மீது ஆர்.பி.எஃப் சட்ட நடவடிக்கை எடுத்தது.
போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கை என்னும் பாராட்டத்தக்க முயற்சியாக, 2024 பிப்ரவரி மாதத்தில் 86 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்து, ரூ.3.41 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இக்குற்றவாளிகள் மேல் சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரமளிக்கப்பட்ட அரசு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.