fbpx

பயங்கரம்…! மாஸ்கோ துப்பாக்கி சூட்டில் 40 பேர் மரணம், 100-க்கும் மேற்பட்டோர் காயம்…!

மாஸ்கோ இசை கச்சேரி தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ரஷ்ய நாட்டு தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை அரங்கு கூடத்திற்குள் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை அன்று நகரில் அமைந்துள்ள குரோகஸ் சிட்டி ஹாலில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. துப்பாக்கியுடன் அரங்கத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நண்பர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஏராளமான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருவதாக ரஷ்யா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 40 பேர் உயிரிழந்ததாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ரஷ்யாவின் பெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் தெரிவித்துள்ளது இந்த தாக்குதல், சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யாவில் நடந்த மிக மோசமான தாக்குதல் ஆகும். பல துப்பாக்கி ஏந்தியவர்கள் மாஸ்கோவின் விளிம்பில் உள்ள இசை கச்சேரி அரங்கிற்குள் நுழைந்து பார்வையாளர்களை தானியங்கி துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்.

Vignesh

Next Post

கோவையில் ஸ்டாலினே வந்து முகாமிட்டாலும், சரித்திர ஓட்டு வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெறும்!… Annamalai விளாசல்!

Sat Mar 23 , 2024
Annamalai: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலினே வந்து முகாமிட்டாலும், சரித்திர ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ.,வெற்றி பெறும் என்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை லோக்சபா தொகுதியை பொறுத்தவரை மூன்று வேட்பாளர்களுக்கும், மூன்று கட்சியினருக்கும் இடையே போட்டி அல்ல. 70 ஆண்டுகளாக தமிழகத்தில் நடக்கும் அதர்மத்துக்கும் தர்மத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல். தமிழகத்தில் பணமழை இங்கே பொழியும், இலவசங்கள் அள்ளித் தெளிக்கப்படும். கோவையில் முதலமைச்சரே […]

You May Like