மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான உயிரினங்கள் பட்டியலில் கொசு முதலிடத்தில் உள்ளது.
கொசு உலகின் மிக கொடிய உயிரினம். மலேரியா, டெங்கு, மேற்கு நைல், மஞ்சள் காய்ச்சல், ஜிகா, சிக்குன்குனியா மற்றும் நிணநீர் ஃபைலேரியாஸிஸ் போன்ற நோய்களைப் பரப்பும் கொசு, உலகில் உள்ள மற்ற உயிரினங்களைக் காட்டிலும் அதிகமான மக்களைக் கொல்கிறது. இந்த நோய்களுக்கு எதிராக பலரும் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில், மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான உயிரினங்கள் பட்டியலில் கொசு முதலிடத்தில் உள்ளது. தரவுகளின் படி, ஆண்டுக்கு 10 லட்சம் உயிரிழப்புகளை கொசுக்கள் ஏற்படுத்துகின்றன. அடுத்ததாக, நன்னீர் நத்தைகள் ஆண்டிற்கு இரண்டு லட்சம் உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன. பாம்புகள் சராசரியாக 1 லட்சத்து 38 ஆயிரம் உயிரிழப்புகளையும், நாவாய் பூச்சிகள் 10,000 உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகின்றன.
அதேபோல், தேள்கள் 2,600 உயிரிழப்புகளை, அஸ்காரிஸ் புழுக்கள் ஆண்டுக்கு 2,500 இறப்புகளையும், உப்பு நீர் முதலைகள் 1,000 இறப்புகளையும், யானைகள் 500 இறப்புகளையும், நீர் யானைகள் 500 உயிரிழப்புகளையும் ஏற்படுத்துவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.