உலகில் விலை உயர்ந்த பொருட்களின் பட்டியலில் தங்கத்தை மிஞ்சிய எத்தனையோ பொருட்கள் சாதாரண மக்களால் நினைத்தும் பார்க்க முடியாத விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. அந்த வகையில் தங்கத்தை விடவும் பெருமதியான பொருட்கள் என்ன என்ன என்பது குறித்து இந்த பதிவில் பாப்போம்.
ஃபிரான்சியம்
உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கதிரியக்க தனிமமாக ஃபிரான்சியம் அறியப்படுகின்றது. ஒரு கிராம் ஃபிரான்சியத்தின் விலை ரூ.8,313 கோடி (இந்திய மதிப்பின் படி) ஆகும்.
குறித்த தனிதத்தின் ஆயுட்காலம் 22 நிமிடங்கள் மட்டுமே ஆகும். 22 நிமிடங்களின் பின்னர் இந்த உலோகம் வேறு உலோகமாக மாறிவிடும். இந்த உலோகம் தற்போது பயன்பாட்டில் இல்லை என்றாலும் உலகின் மிக விலை உயர்ந்த தனிமமாக ஃபிரான்சியமே கருதப்படுகிறது.
காலிஃபோர்னியா
ஃபிரான்சியத்திற்கு அடுத்தப்படியாக விலையுயர்ந்த உலோகமாக காலிஃபோர்னியா பார்க்கப்படுகின்றது. கடந்த 1950 ஆம் ஆண்டு முதன்முதலில் காலிஃபோர்னியா பல்கழைகழகத்தில் உருவாக்கப்பட்டதன் காரணமாகவே இந்த தனிமத்திற்கு அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஒரு கிராம் காலிஃபோர்னியாவின் விலை ரூ.2.22 கோடி ஆகும். இதனை ஆண்டுக்கு அரை கிராம் மட்டுமே உருவாக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கார்பன்
அனைத்து உயிரினங்களிலும் காணப்படும் கார்பன் என்பதும் மிகவும் விலையுயர்ந்த தனிமங்களில் ஒன்றாகும். வைர வடிவிலான கார்பன் ஒரு கிராமின் பெறுமதி ரூ. 54 லட்சம் ஆகும்
புளூட்டோனியம்
அணு குண்டுகள், அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் புளூட்டோனியம் எனும் தனிமம் வைரத்திற்கு அடுத்த படியாக விலையுயர்ந்ததாக கருதப்படுகின்றது. இவை எளிதில் தீப்பற்ற கூடியது என்பதால் இதனை சேமித்து வைப்பது மிகவும் கடினம். ஒரு கிராம் ரூ.3.3 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
ஸ்காண்டியம்
ஸ்காண்டியமும் ஒரு விலையுயர்ந்த தனிமமாகும். இது மிகவும் குறைந்த அளவில் தான் பூமியில் காணப்படுகின்றது. ஒரு கிராம் ஸ்காண்டியத்தின் விலை ரூ.22,000 வரை விற்பனையாகின்றது.
லுடேடியம்
பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் லுடேடியம் பூமியில் உள்ள அரிய உலோகமாகும். இது அல்கலைஷேன், ஹைட்ரஜனேட்டம், பாலிமரைசேஷன், போன்ற செயல்முறைகளில் அதிகமாக பயன்பாட்டில் இருக்கின்றது.
பிளாட்டினம்
நம்மில் பெரும்பாலனவர்களுக்கு பிளாட்டினம் பற்றி தெரிந்திருக்கும். மிகவும் வினைத்திறன் கொண்ட இந்த தனிமம் ஆபரணங்கள் செய்யவும் பயன்படுகின்றன. இதன் தேவை மிக அதிகமாக இருந்தாலும், ஆண்டுக்கு சில நூறு டண்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
தங்கம்
உலகின் மிகவும் பிரபலமான மற்றும் விலையுயர்ந்த உலோகங்களில் தங்கம் முக்கிய இடம் வகிக்கின்றது. உலகம் முழுவதும் தங்கத்திற்கு அதிக தேவை காணப்படுகின்றது. இருப்பினும், உலகின் விலையுயர்ந்த பொருட்களின் பட்டியலில் தங்கம் 10வது இடத்தை பெறுகின்றது. ஒரு கிராம் தங்கம் தற்போது 5800 வரையில் விற்பனை செய்யப்படுகின்றன.