fbpx

2023இல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை..!! அட இதை கூடவா தேடியிருக்காங்க..!!

2023ஆம் ஆண்டு நிறைவு பெறும் நிலையில், கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியது எதுவாக இருக்கும் என்ற கேள்விகளுக்கு சுவாரசிய பதில்கள் கிடைத்துள்ளன.

அதாவது, இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்வெளி திட்டத்தின் வெற்றி உலகமெங்கும் கவனத்தை ஈர்த்தது. அந்த வகையில், ’சந்திரயான் -3’ என்பதே இந்தியாவில் அதிகம் கூகுள் செய்யப்பட்டதில் இந்தாண்டு முதலிடம் பிடித்துள்ளது. மேலும், 2. கர்நாடக தேர்தல் முடிவுகள், 3. இஸ்ரேல் செய்திகள், 4. சதீஷ் கௌசிக், 5. பட்ஜெட் 2023, 6. துருக்கி நிலநடுக்கம், 7. அதிக் அகமது 8. மேத்யூ பெர்ரி 9. மணிப்பூர் செய்திகள், 10. ஒடிசா ரயில் விபத்து ஆகியவை டாப் 10-ல் இடம் பிடித்துள்ளன.

மேலும், இந்த பட்டியலில் ’ஜி20 என்றால் என்ன?’, ’சாட்ஜிபிடி என்றால் என்ன?’, ’ஹமாஸ் என்றால் என்ன?’, ’செங்கோல் என்றால் என்ன?’ உள்ளிட்ட கேள்விகள் அதிகம் இடம்பிடித்துள்ளன. அதேபோல், ‘எப்படி’ என்ற கேள்வியின் வரிசையில், சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கான வீட்டு வைத்தியம், யூடியூப் சப்ஸ்கிரைபர் எண்ணிக்கையை உயர்த்துவது, கார் மைலேஜை மேம்படுத்துவது, சரியான காஞ்சிபுரம் பட்டுப் புடவையை அடையாளம் காண்பது, ஆதாருடன் பான் இணைப்பு உள்ளிட்டவைகள் ’எப்படி’ என்ற வரிசையில் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவின் கூகுள் தேடலின் அடிப்படையில் 2023ஆம் ஆண்டின் பிரபலமான விளையாட்டு நிகழ்வுகளில், ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை கிரிக்கெட் ஆகியவை முதல் 2 இடங்களை பிடித்துள்ளன. பிரபலங்களின் பட்டியலில் பாலிவுட் தாரகை கியாரா அத்வானி முதலிடம் பிடித்திருக்கிறார். திரைப்படங்களின் வரிசையில் ஷாருக்கானின் ’ஜவான்’ முதலிடம் பிடித்திருக்கிறது. ரஜினி காந்தின் ’ஜெயிலர்’ 7வது இடத்தையும், விஜயின் ’லியோ’, ’வாரிசு’ ஆகிய திரைப்படங்கள் முறையே 8 மற்றும் 10-வது இடத்தை பிடித்துள்ளன. ஓடிடி படைப்புகளின் பட்டியலில் ஷாகித் கபூர், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ’ஃபார்ஸி’ வலைத்தொடர் முதலிடம் பிடித்துள்ளது.

Chella

Next Post

வெள்ளத்தில் சேதமடைந்த வாகனங்களை பழுதுநீக்க உதவி எண்கள்!…

Tue Dec 12 , 2023
வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை பழுதுநீக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சார்பில் உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையை புரட்டிபோட்ட மிக்ஜாம் புயலின் பாதிப்புகள் இன்னமும் அடங்கவில்லை. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து நிவாரண பணிகளிலும், மீட்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் உட்பட, அமைச்சர்கள், எமஎல்ஏக்கள், மாநகராட்சி அதிகாரிகள் என அனைவருமே மழைநீர் தேங்கியிருக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.. எனினும், மிக்ஜாம் புயல் காரணமாக […]

You May Like