ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் பகுதியை சேர்ந்தவர் கயான் சிங். இவருக்கு ஹேமலதா என்ற மனைவியும், 8 வயதான கோலு என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இவரது மகன் கோலு திடீரென காணாமல் போயுள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஊர் முழுவதும் தங்களின் மகனை தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் சிறுவனை தீவிரமாக தேடி வந்த நலையில், 3 நாட்களுக்கு பின் சிறுவன் கோலுவின் உடல் சந்தன்புரா என்ற பகுதியில் உள்ள காய்கறி தோட்டத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது.
பல கட்ட விசாரணைகள் நடந்த பின்பும் போலீசாரால் கொலையாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அந்த வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதனால், கொலையாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று கோலுவின் தந்தை கயான் சிங் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என காவல்துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, பயானா வட்ட அதிகாரி நித்தி ராஜ் தலைமையில் ஒரு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளது. ஆம், கோலுவின் தாய் ஹேமலதாவிற்கும், அவரது 24 வயதான அண்ணன் மகன் கிருஷ்ண காந்திறக்கும் கள்ளத்தொடர்ப்பு இருந்துவந்துள்ளது. இந்நிலையில், 2021ஆம் ஆண்டு ஹேமலதாவும், கிருஷ்ணகாந்தும் உல்லாசமாக இருந்ததை சிறுவன் பார்த்துவிட்டான். இது கணவன் கயான் சிங்கிற்கு தெரிந்துவிட்டால் பிரச்னையாகிவிடும் என நினைத்த அவர்கள் சிறுவன் கோலுவை செல்போன் சார்ஜ் செய்யும் கேபிளால் கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ளனர். பின்னர், சிறுவனின் உடலை அருகில் உள்ள காய்கறி தோட்டத்தில் புதைத்துள்ளனர். இந்நிலையில் போலீசார் தற்போது ஹேமலதாவையும், கிருஷ்ணகாந்தையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.