மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, சோயாபீன் மற்றும் அரிசி தவிடு எண்ணெய் விலையை லிட்டருக்கு 14 ரூபாய் வரை குறைத்துள்ளதாக மதர் டெய்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை குறிப்பின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய் லிட்டருக்கு ரூ.180-க்கு கிடைக்கும், தற்போதைய விலை லிட்டருக்கு ரூ.194 ஆக உள்ளது. உலகளாவிய சமையல் எண்ணெய் விலை வீழ்ச்சியின் பலனை நுகர்வோருக்கு வழங்குமாறு சமையல் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரபல முன்னணி பால் விநியோகம் செய்யும் நிறுவனமான மதர் டெய்ரி, தாரா பிராண்டின் கீழ் சமையல் எண்ணெய்களை விற்பனை செய்கிறது. அரசாங்கத்தின் தலையீட்டின் பலன்களை நுகர்வோருக்கு வழங்குவதன் மூலம், தாரா சோயாபீன் எண்ணெய் மற்றும் தாரா ரைஸ்பிரான் எண்ணெய் ஆகியவற்றின் எம்ஆர்பியை லிட்டருக்கு 14 ரூபாய் வரை குறைத்துள்ளோம், இது அடுத்த வாரத்தில் சந்தையில் கிடைக்கும்” என்று ஒரு நிறுவனம் தெரிவித்துள்ளது.. சுத்திகரிக்கப்பட்ட ரைஸ்பிரான் எண்ணெயின் விலை லிட்டருக்கு ரூ.194ல் இருந்து ரூ.180 ஆக குறையும். அடுத்த 15-20 நாட்களில் சூரியகாந்தி எண்ணெயின் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கிறது.
ஜூன் 16 அன்று, மதர் டெய்ரி அதன் சமையல் எண்ணெய்களின் விலையை லிட்டருக்கு ரூ.15 வரை குறைத்தது, உலகச் சந்தைகளில் விலை குறைக்கப்பட்டது. உலகளாவிய விலை வீழ்ச்சிக்கு மத்தியில், இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களின் அதிகபட்ச சில்லறை விலையை ஒரு வாரத்திற்குள் லிட்டருக்கு ரூ.10 வரை குறைக்கவும், அதே பிராண்டின் ஒரே மாதிரியான எம்ஆர்பியை பராமரிக்கவும் சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசாங்கம் புதன்கிழமை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.