fbpx

தங்கள் நிலத்திற்காக போராடிய தாய்-மகளை உயிருடன் புதைத்த நில அபகரிப்பு கும்பல்..!! ஆந்திராவில் அதிர்ச்சி..!!

ஆந்திராவில் ஒரு ஏழைக் குடும்பத்தின் நிலத்தை அரசியல் செல்வாக்கு படைத்த நபர்கள் அபகரித்ததோடு மட்டுமல்லாமல், தாயையும், மகளையும் குழித்தோண்டி உயிருடன் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஹரிபுரம் கிராமத்தை சேர்ந்த தாய் தாளம்மா, மகள் சாவித்திரி ஆகியோருக்கு சொந்தமான வீட்டுமனையை அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தராவ், பிரகாஷ்ராவ், ராமராவ் ஆகிய 3 பேர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. தங்கள் வீட்டுமனையை திரும்ப தரக் கோரி இரண்டு பெண்களும் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தங்கள் நிலத்திற்காக போராடிய தாய்-மகளை உயிருடன் புதைத்த நில அபகரிப்பு கும்பல்..!! ஆந்திராவில் அதிர்ச்சி..!!

இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டுமனையை ஒப்படைக்க கோரி நிலத்தின் அருகில் அமர்ந்து அவர்கள் இருவரும் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த ஆனந்தராவ், பிரகாஷ்ராவ், ராமராவ் ஆகிய மூன்று பேரும் டிராக்டர்களில் மண்ணை அள்ளி வந்து அவர்கள் மீது கொட்டி உயிருடன் புதைத்து கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தங்கள் நிலத்திற்காக போராடிய தாய்-மகளை உயிருடன் புதைத்த நில அபகரிப்பு கும்பல்..!! ஆந்திராவில் அதிர்ச்சி..!!

இதனை கவனித்த அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மண்ணில் புதைக்கப்பட்ட இரண்டு பெண்களையும் போராடி மீட்டனர். இது பற்றி தகவல் அறிந்த பலாசா போலீசார் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பெண்களிடம் வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Chella

Next Post

’’செல்போன் மீது மோகம்’’  தாத்தா கண்டித்ததால் 4 பேர் கொலை… 15 வயது சிறுவனின் கொடூர செயல்…

Tue Nov 8 , 2022
திரிபுராவில் செல்போனில் படம் பார்த்துக் கொண்டே இருந்ததால் தாத்தா கண்டித்ததால் வீட்டில் இருந்த 4 பேரையும் 15 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திரிபுரா மாநிலம் தலாய் மாவட்டம் கமால்பூர் அடுத்த ஷிப் பாரி என்ற கிராமத்தில் வசிப்பவர் பாதல் தேப்நாத்(70) , இவரது மருமகள் சுமிதா தேப்நாத் (42), பேத்தி சுபர்ணா தேப்நாத் (10) ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது தேப்நாத்தின் 15 வயது […]

You May Like