விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்துக்கரை பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் இவர் வெல்டிங் தொழிலாளியாக இருந்து வருகிறார் இவருக்கு ராமுத்தாய் (30) என்ற மனைவியும், நிஷா(6), அர்ச்சனா தேவி(3) என்ற 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றன.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை வேலை முடிவடைந்து வீட்டிற்கு வந்த முத்துக்குமார் மனைவி ராமுத்தாய் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ராமத்தாய் கையில் வைத்திருந்த செல்போனை பிடுங்கி கீழே போட்டு அதை உடைத்து இருக்கிறார். இதன் காரணமாக 2 நாட்களாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையில், நேற்று முன்தினம் மாலை சுமார் 4 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்த தன்னுடைய மூத்த மகள் மற்றும் உறங்கிக் கொண்டிருந்த தன்னுடைய இளைய மகள் விழித்து வரை அழைத்துக் கொண்டு ராமுத்தாய் வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார்.
குழந்தைகளுடன் வெளியேறிய அவர் இரவு வரையில் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை அருகில் உள்ள விவசாயி காற்றில் ராமுத்தாய் மற்றும் அவருடைய மூத்த மகன் நிஷா உள்ளிட்ட ஒரு சடலமாக மிதப்பலாக அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற சேத்தூர் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றில் மூழ்கி இருந்த மூவரின் உடலையும் மீட்பு அதன் பிறகு அவர்களுடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் தன்னுடைய இறந்து பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் சேர்த்து ஒரு பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.