ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி அருகே சேனப்பட்லா என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக பூட்டப்பட்ட வீடுகளில் திடீரென்று தீப்பற்றி எறிய தொடங்கியது. இதனால் பல வீடுகளில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.
திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்த வீடுகளால் பொதுமக்கள் அச்சமடையத் தொடங்கினர். சாமிக்கு குற்றம் காரணமாக, தீப்பற்றி எரிவதாக வதந்தி பரவியது. இதனை தொடர்ந்து, அங்குள்ள கோவிலில் பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர். அதோடு வீடுகளிலும் விளக்கு ஏற்றி பரிகார பூஜை நடத்தினர்.
அதன் பின்னரும் பூட்டிய வீடுகள் தீப்பற்றி எரிந்தது. இதனால் பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக அவ்வப்போது சிலரை சந்தேகத்தின் அடிப்படையில், பிடித்து சென்ற காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்த னர்.
கடைசியாக அந்த பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதாவது தாயின் நடத்தை சரியில்லாததால் அதை ஊரில் உள்ள சில ஆண்களுடன் முறை தவறிய உறவில் இருந்து வந்தார் எனவும் அதை எனக்கு பிடிக்கவில்லை எனவும், அதனால் ஊரை காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு சென்று வசிக்கலாம் என்று என்னுடைய தாயிடம் தெரிவித்தேன் என்று தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அவர் கேட்கவில்லை. ஆகவே எப்படியாவது வீட்டை காலி செய்துவிட்டு வேறு ஊருக்கு செல்ல வேண்டும் என்பதற்காக முதலில் நாங்கள் வசிக்கும் வீட்டில் இருக்கும் பீரோவுக்கு தீ வைத்தேன், என்னுடைய தாய்க்கு பயத்தை ஏற்படுத்துவதற்காக அவர் உறங்கிக் கொண்டிருந்த போது சேலையில் தீ வைத்தேன். அப்போதும் என்னுடைய தாய் வீட்டை காலி செய்ய தயாராக இல்லை என்று கூறியிருக்கிறார்.
ஆகவே அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் வசிக்கும் வீடுகள் அவர்களுடைய வைக்கோல் போர்கள் உள்ளிட்டவற்றுக்கு தீ வைத்தேன் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, அவரை கைது செய்த காவல்துறையினர் அந்த இளம் பெண்ணை சிறையில் அடைத்துள்ளனர்.