கடலூர் மாவட்டம் காராமணி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுதன் குமார். கடந்த 14ஆம் தேதி சுதன் குமார் மற்றும் அவரது தாய் கமலேஸ்வரி, மகன் நிஷாந்தன் ஆகிய மூவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் 200-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் ஆனந்த் மற்றும் சாகுல் ஹமீது ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, சங்கர் ஆனந்த் தந்தையை இழந்து தாயுடன் வசித்து வந்த நிலையில், சங்கரின் தாய்க்கும், உயிரிழந்த சுதன் குமாருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவரவே அவமானம் தாங்க முடியாமல் சங்கரின் தாய், கடந்த சில தினங்களுக்கு முன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. இதனால் சங்கர் ஆனந்த் தாயின் கள்ளக்காதலன் சுதன் குமார் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
இதற்கிடையே, கடந்த 12ஆம் தேதி சுதன் குமாரின் தாயார் கமலேஸ்வரி சங்கரை அனாதை பயலே என திட்டியுள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற சங்கர் ஆனந்த், சுதன் குமாரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சுதன் குமார், கமலேஸ்வரி, 10 வயது சிறுவன் நிஷாந்தனை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு எதுவும் நடக்காதது போல் தனது வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், நடந்த சம்பவத்தை தனது நண்பனான சாகுல் ஹமீதிடம் தெரிவித்துவிட்டு 14ஆம் தேதி இருவரும் இணைந்து மீண்டும் அதே வீட்டிற்குள் நுழைந்து இறந்து கிடந்த மூவரது உடல்களையும் தீ வைத்து எரித்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் கடலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : ‘இனி வீட்டிற்கே ரேஷன் பொருட்கள் டோர் டெலிவரி’..!! அமைச்சர் சக்கரபாணி சொன்ன குட் நியூஸ்..!!