fbpx

அம்மா… சாப்பாடு கொஞ்சமா போடுங்க..!! தாய்க்கு வந்த சந்தேகம்..!! துருவி துருவி கேட்டதால் சிறுமி சொன்ன அதிர்ச்சி சம்பவம்..!!

டெல்லி மாநிலம் ஹவுஸ் காஸில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் படிக்கும் 3 வயது சிறுமியை, ஒரு வாரமாக கழிவறைக்கு செல்லும்போதெல்லாம் பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டின் பேரில் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதிய உணவுக்கு லஞ்ச் பாக்ஸில் உணவு கொஞ்சமாகக் கொடுங்கள் என்று பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் கேட்டுள்ளார். ஏன் குறைவான உணவு கேட்கிறார் என்று காரணம் கேட்டதற்கு, தான் குறைவாக சாப்பிட்டால்தான் அடிக்கடி கழிப்பறைக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது என்று கூற, இதனைக் கேட்டு தாய் அதிர்ச்சி அடைந்தார். மேலும், அவரை துருவித் துருவி கேட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட துப்புரவு பணியாளர் அர்ஜுன் என்பவர் அங்கு இருப்பார் என்றும், தகாத முறையில் தன்னை தொடுவார் என்றும் தனது தாயிடம் சிறுமி கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக துணை போலீஸ் கமிஷனர் சந்தன் சவுத்ரி கூறுகையில், ”ஆகஸ்ட் 1ஆம் தேதி சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது குறித்த புகார் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இந்த சம்பவம் பஞ்சீலில் உள்ள சிராக் டெல்லி மேம்பாலம் அருகே உள்ள பள்ளியில் நடந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது தாய் மற்றும் அத்தை ஆகியோர் போலீசாருடன் பள்ளிக்கு வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி, தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படும் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையை போலீசாரிடம் காண்பித்துள்ளார். அதோடு, குற்றம் சாட்டப்பட்ட துப்புரவு தொழிலாளி அர்ஜுனையும் அடையாளம் காட்டினார்.

டெல்லி மகளிர் ஆணையத்தின் ஆலோசகர் முன் செவ்வாய்க்கிழமை குழந்தை மற்றும் அவரது தாயின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. சிறுமியின் கூற்றுப்படி, அவர் கழிவறைக்கு செல்லும்போதெல்லாம், அந்த துப்புரவு பணியாளர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் புகாரை அடுத்து அர்ஜுன் குமாரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் தந்தை மத்திய அமைச்சகத்தில் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

உங்களுக்கு எழுதப் படிக்க தெரிந்தால் போதும்……! அறநிலையத் துறையில் காத்திருக்கிறது வேலை வாய்ப்பு……! உடனே விண்ணப்பியுங்கள்……!

Sat Aug 5 , 2023
இந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து சமயத்தைச் சார்ந்த கோவில்களை முறையாக பராமரிக்க அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு துறையாகும். இந்தத் துறையில், தற்போது புதிய வேலைவாய்ப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இந்த புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலில் அர்ச்சகர், உதவி அர்ச்சகர், நாதஸ்வரம், தவில், மடப்பள்ளி பரிசாரகர், உதவி பரிசாரகர், ஓதுவார், இரவு காவலர், பகல் காவலர், திருவலகு மின் பணியாளர் மற்றும் அலுவலக […]

You May Like