fbpx

தாய்மொழியே சிறந்தது!… ஆங்கில மொழியை பயன்படுத்தினால் அபராதம்!… இத்தாலியில் புதிய சட்டம் அமல்!

நாட்டின் அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளில் எந்தவொரு வெளிநாட்டு மொழி, குறிப்பாக ஆங்கிலத்தை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் இத்தாலி அரசு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

செயற்கை நுண்ணறிவில் அசாத்திய ஆற்றல் கொண்ட சாட் ஜிபிடிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் இத்தாலியில் தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முறையான தொடர்புக்கு ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய இத்தாலி முயல்வதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில், இத்தாலியில் உள்ள குடிமக்கள் முறையான தகவல்தொடர்புக்காக ஆங்கிலம் அல்லது வேறு ஏதேனும் வெளிநாட்டு மொழியைப் பயன்படுத்துவது விரைவில் தடை செய்யப்படும் என்று சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் கட்சி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த சட்டத்தின்படி, எந்தவொரு வெளிநாட்டு மொழி, குறிப்பாக ஆங்கிலத்தை பயன்படுத்தினால் 1,00,000 யூரோ வரையிலான தொகை அபராதமாக விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.”இத்தாலிய பிரதிநிதிகள் சபையில், ஃபேபியோ ராம்பெல்லி இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதற்கு பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் ஆதரவு கிடைத்துள்ளது.

Kokila

Next Post

எழுத்தாளரான 4 வயது சிறுவன்!... 4 ஆண்டுகள் 218 நாட்களில் புத்தகம் எழுதி வெளியிட்ட ஆச்சரியம்!... கின்னஸ் சாதனை!...

Thu Apr 6 , 2023
அபுதாபியில் சுமார் 4 ஆண்டுகள் 218 நாட்களில் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ள 4வயதே ஆன சிறுவன், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அபுதாபியைச் சேர்ந்த சயீத் ரஷீத் அல்மெய்ரி என்ற சிறுவனக்கு 4 வயது தான் ஆகிறது. சரியாகச் 4 ஆண்டுகள் 218 நாட்களில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். கடந்த மார்ச் 9ஆம் தேதி அன்று புத்தகம் வெளியான சில நாட்களிலேயே ஆயிரம் பிரதிகளுக்கு மேல் […]

You May Like