சென்னையில் குப்பை எடுத்துச் செல்லும் 3 சக்கர பேட்டரி வாகனத்தை, முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் இயக்குவது சட்டவிரோதம் என மாநகராட்சிக்கு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
பேட்டரி வாகனம் மோதி காயமடைந்த சிறுமிக்கு ரூ.1.78 லட்சம் இழப்பீடு வழங்க, கோரி சிறுமியின் தந்தை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். முறையான ஓட்டுனர் உரிமம் இல்லாத நபர் மூலம் வாகனத்தை இயக்கியதால் மாநகராட்சி நிர்வாகமே இந்த விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என கண்டிப்புடன் தெரிவித்தது. மேலும், காயமடைந்த சிறுமிக்கு ரூ.1.78 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.
Read more : சங்கடங்களை தீர்க்கும் சங்குப் பூ.. வீட்டின் இந்த திசையில் வையுங்க.. தோஷம் நீங்கி செல்வம் பெருகும்..!!