fbpx

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!… அதிகமாக பெட்ரோல் நிரப்பினால் வெடித்துவிடும்?… வைரல் செய்தியும்!… மத்திய அரசு விளக்கமும்!

வாகனங்களில் அதிகபட்ச கொள்ளளவு வரை பெட்ரோல் நிரப்ப வேண்டாம் என்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு வகையான போலி செய்திகள் வைரலாகி வருகின்றன. ஒவ்வொரு சூழலுக்கு ஏற்றவாறு போலி செய்திகள் பரப்பப்படுகின்றன. உதாரணமாக கோவிட் காலத்தில், பல்வேறு போலி செய்திகள் பரவியது. அதே போல் மத்திய அரசு, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு போலி தகவல்களும் பரவி வருகின்றன.

மறுபுறம் வேறொரு நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்தியாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என்பது போன்ற செய்திகள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த செய்தியில், வாகன ஓட்டிகள், தங்கள் எரிபொருள் தொட்டிகளை அதிகபட்ச கொள்ளளவிற்கு நிரப்ப வேண்டாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதில் “ வாகன உரிமையாளர்களை தங்கள் கார்களின் எரிபொருள் தொட்டிகளை அதிகபட்ச வரம்பிற்குள் நிரப்ப வேண்டாம். வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் மற்றும் முழு தொட்டி வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த பதிவு பல சமூக ஊடக பயனர்களால் பகிரப்பட்டு வருகிறது.

இருப்பினும், இந்த தகவல் போலியானது என்றும், தவறானது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பத்திரிகை தகவல் பணியகமான PIB-ன் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள PIB “ உங்கள் வாகனத்தில் அதிகபட்ச வரம்பிற்குள் பெட்ரோல் நிரப்ப வேண்டாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டதாக பரவும் செய்தி போலியானது..” என்று குறிப்பிட்டுள்ளது.

Kokila

Next Post

கொளுத்தும் வெயில்!... தூக்கம் வரவில்லையா?... ஒரு கிண்ணம் ஐஸ்கட்டி போதும்!… டிரை பண்ணுங்க!

Thu Apr 27 , 2023
வெயில் காலத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக நமக்கு தூக்கம் என் மிகவும் கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்ட சமயத்தில் ஐஸ்கட்டியை பயன்படுத்தி இந்த டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க. நல்ல தூக்கம் கிடைக்கும். வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. வெயில் காலம் வந்தாலே பறிபோவது நிம்மதியான தூக்கமாகத்தான் இருக்கும். கோடை வெயில் இப்போதிலிருந்தே வெயில் சுட்டெறிக்க ஆரம்பித்து விட்டது. எனவே நாம் இரவு தூங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். இந்நிலையில் சூட்டுடன் […]

You May Like