fbpx

வாகன ஓட்டிகள் 50% அபராதத்துடன்‌ வரி செலுத்த வேண்டும்…! வந்தது அதிரடி உத்தரவு…!

சாலை வரி செலுத்தாத சரக்கு வாகனங்கள்‌ மற்றும்‌ ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு 50% அபராதத்துடன்‌ வரி செலுத்த வேண்டும்.

இது குறித்து தருமபுரி வட்டாரப்‌ போக்குவரத்து அலுவலர்‌ தனது செய்தி குறிப்பில்; நடப்பு காலாண்டு 31.03.2023 -க்கு சாலை வரி செலுத்தாத சரக்கு வாகனங்கள்‌ மற்றும்‌ ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு 50% அபராதத்துடன்‌ வரி செலுத்த வேண்டிய கடைசி நாள்‌ வருகின்ற 30.03.2023 ஆகும்‌. இது தொடர்பாக அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும்‌ வரி கேட்பு அறிவிப்பு மற்றும்‌ முகாந்திரம்‌ (Demand Notice) அஞ்சல்‌ மூலம்‌ அனுப்பப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து வாகன உரிமையாளர்களும்‌ அரசுக்கு செலுத்தவேண்டிய சாலை வரியினை Online மூலம்‌ உரிய காலக்கெடுவிற்குள்‌ செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. தவறும்‌ பட்சத்தில்‌ சாலை வரி செலுத்தாத வாகனங்களின்‌ அனுமதி சீட்டு ரத்து செய்யப்படும்‌. மேலும்‌, வரி செலுத்தாமல்‌ அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்ட வாகனங்களை பொது சாலையில்‌ இயக்கினால்‌ வாகனங்கள்‌ பறிமுதல்‌ செய்யப்படும்‌ என தருமபுரி வட்டாரப்‌ போக்குவரத்து அலுவலர்‌ தாமோதரன்‌ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Vignesh

Next Post

“ இந்தியாவில் பத்திரிகை சுதந்திரத்திற்கு ஆபத்து..” பிரதமர் மோடி மீது நியூயார்க் டைம்ஸ் விமர்சனம்..

Sat Mar 11 , 2023
இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் ஆபத்தில் உள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் பிரதமர் மோடியை விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான மோடியின் இறுதித் தாக்குதல் தொடங்கியது’ (Modi’s Final Assault on India’s Press Freedom Has Begun’) என்ற தலைப்பில் நியூடார்க் டைம்ஸ் நாளிதழ் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி “காஷ்மீரி பத்திரிகையை அழித்துவிட்டார்” மற்றும் “ஊடகங்களை அரசாங்க ஊதுகுழலாக பணியாற்ற மிரட்டுகிறார்” என்று […]

You May Like