குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும் அரசுக் கொள்முதல் கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தவும் “எம்எஸ்எம்இ கனெக்ட் 2023” நிகழ்வு சென்னையில் நடத்தப்பட உள்ளது சென்னை கிண்டியில் உள்ள திரு வி க தொழிற்பேட்டை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வியாபாரா மேம்பாட்டு திட்ட நிகழ்வு மார்ச் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த 2 நாள் நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட தொழில்கள் மற்றும் நிறுவனங்களின் உயர்நிலை அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் இந்த நிகழ்வுகளில் 500க்கும் அதிகமான குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், 30க்கும் அதிகமான பெரு நிறுவனங்கள், கொள்முதல் செய்வதற்கான அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.