இந்தியாவின் பெரும் பணக்காரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி தற்போது விளையாட்டு பான சந்தையில் கால் பதித்துள்ளார். தனது புதிய தயாரிப்பான ‘ஸ்பின்னர்’ என்ற பானத்தை இந்தியாவில் வெறும் ரூ.10க்கு அறிமுகப்படுத்த உள்ளார். இந்த பானம், குறைந்த தயாரிப்பு விலையில் விற்பனைக்கு வருவதால், பெப்சிகோவின் கேடோரேட் மற்றும் கோகோ கோலாவின் பவேரேட் போன்ற விளையாட்டு பானங்களுக்கு டஃப் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரொடக்ட் லிமிடெட், முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுடன் இணைந்து விளையாட்டு பானங்களை உருவாக்க, உற்பத்தி செய்ய மற்றும் சந்தைப்படுத்தியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
யூனிலீவர், பிரீமியம் வாடிக்கையாளர் தளத்தை இலக்காகக் கொண்டு, அதன் ஹைட்ரேஷன் பானமான லிக்விட் IV உடன் விளையாட்டு மற்றும் ஆற்றல் பானத் துறையில் அம்பானி நிறுவனம் இணைந்துள்ளது. உடல்நலம் மற்றும் ஆரோக்கியத் துறையில் லோகன் பாலின் பிரைம், ரெட் புல் மற்றும் கேடோரேட் போன்ற ஆற்றல் மற்றும் சர்வதேச விளையாட்டு பானங்களுடன் ஸ்பின்னர் நேரடியாக போட்டியிடும் என்று கூறப்படுகிறது.
குறைந்த விலையில் ஒரு தயாரிப்பை அறிமுகத்துவது என்பது முகேஷ் அம்பானியின் வழக்கமான மார்க்கெட்டிங் உத்தியாகும். இந்த உத்தி அவருக்கு எப்போதுமே கை கொடுத்துள்ளது. அந்த வகையில் தற்போது ஸ்பின்னர் பானமும் அதிக மக்களைச் சென்றடைய குறைந்த விலையில் சந்தையில் நுழைகிறது
2 ஆண்டுகளுக்கு முன்பு, ரிலையன்ஸ் பிரபலமான காம்பா பானத்தை மீண்டும் அறிமுகப்படுத்தி, இந்தியாவின் பரந்த கார்பனேற்றப்பட்ட பானங்கள் துறையில் ஊடுருவ குறைந்த விலையை நிர்ணயித்தது. காம்பா பானம் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, கோகோ கோலா மற்றும் பெப்சிகோ போன்ற நிறுவனங்களுக்கு டஃப் கொடுத்தது. இதனால் அந்த நிறுவனங்களும் தங்கள் பானத்தை குறைக்க வேண்டிய சூழல் உருவானது.
ரிலையன்ஸ் நிறுவனம் 2024 நிதியாண்டில் ரூ.3,000 கோடி விற்பனையைப் பதிவு செய்ததால் இந்த உத்தி நிரூபிக்கப்பட்ட வெற்றியாக இருந்தது, மேலும் காம்பா ரூ.400 கோடி பங்களித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஷா அம்பானி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பேசிய இஷா அம்பானி “எங்கள் வளர்ச்சி சிறிய நகரங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் இயக்கப்படுகிறது, அங்கு எங்கள் புதிய கடைகளில் மூன்றில் 2 பங்கு திறக்கப்படுகிறது. இந்த சந்தைகளில் ஒரு இருப்பை நிறுவிய முதல் நவீன சில்லறை விற்பனை நிறுவனம் எங்கள் நிறுவனம் தான்” என்று தெரிவித்திருந்தார்.
Read More : மாருதி சுசுகி கார்கள் வாங்க இது தான் ரைட் டைம்.. ரூ.53,100 வரை தள்ளுபடி.. மிஸ் பண்ணிடாதீங்க..!!