மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பின் மீது மின்னல் தாக்கும் வீடியோ வைரலாகி வருகின்றது.
மும்பை அமாச்சியில் ஷிம்பொலி என்ற பகுதியில் நெமிநாத் கட்டிடம் உள்ளது. நேற்று பெய்த கனமழையால் இடி மின்னல் தாக்கியது.
நேற்று பெய்த அதிகன மழையால் போக்குவரத்து , ரயில்வே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பல அடி உயரத்தில் உள்ள கட்டிடத்தை மின்னல் தாக்கியதும் எந்த சேதாரமும் ஏற்பட வில்லை. மின்னல் தடுப்பு கருவியுடன் இந்த கட்டிடத்தின் அமைப்பு இருந்ததால் எந்த சேதாரமும் ஆகவில்லை. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.