fbpx

“ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட மாமிசம்.. முஸ்லிம்கள் சாப்பிட அனுமதி.”!சிங்கப்பூர் முஃப்தி அறிவிப்பு.!

சிங்கப்பூரில் வாழும் முஸ்லிம்கள், ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் தலைமை முஃப்தி டாக்டர் நசீருத்தீன் முகமது நாசிர் ஃபத்வா அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். மேலும் ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் இறைச்சியிலும் விலங்குகளின் செல்கள் பயன்படுத்தப்படுவதால் அது ஹலாலான இறைச்சி தான் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நாட்டில் சமகால சமூகங்களில் ஃபத்வா பற்றிய இரண்டு நாள் சர்வதேச மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய டாக்டர் நசீருத்தீன் முகமது நாசிர் ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் மாமிசங்கள் ஹலால் முறையில் தான் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை முஸ்லிம்கள் உணவாக உட்கொள்ளலாம் என அறிவிப்பை கொடுத்தார். மேலும் இது தொடர்பாக ஆய்வகங்களில் சென்று நேரடி ஆராய்ச்சி செய்த பின் இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நவீன தொழில்நுட்பம் மற்றும் சமூக மாற்றத்துடன் ஆராய்ச்சி இருக்க வேண்டும் என்பதற்கு ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட மாமிசம் தொடர்பான ஒரு உதாரணமாக அமைந்திருக்கிறது என சிங்கப்பூர் முஸ்லிம்களின் தலைமை முஃப்தி முகமது நசீர் தெரிவித்துள்ளார். நீண்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இந்த ஹலால் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த முடிவு குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் இறைச்சி தொடர்பான ஆய்வுகளை சிங்கப்பூர் இஸ்லாமிய மத கவுன்சில் இரண்டு ஆண்டுகளாக ஆய்வு செய்து அதிலிருந்து பெறப்பட்ட தெளிவான முடிவுகளின் அடிப்படையில் இந்த ஹலால் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

Next Post

"ஒரே நாளில்.. 50 ரூ விலையேற்றமா."? விண்ணை தொட்ட பூண்டின் விலை..! மக்கள் அவதி.!

Sun Feb 4 , 2024
உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் அனைவரும் அன்றாடம் சமையலில் உபயோகிக்கும் முக்கியமான ஒன்று பூண்டு. அதுவும் தமிழ்நாட்டில் பூண்டு இல்லாமல் ஒரு சமையலறை இல்லை என்று சொல்லலாம்.சென்னை கோயம்பேடு சந்தையில், பூண்டின் விலை அதிகரித்து இருக்கிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ பூண்டு 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து பூண்டு வருகிறது. ஆனால் விளைச்சல் குறைவினால் […]

You May Like