இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் எனப்படும் IRCTCயின் பெயரில் போலி செயலிகள் இருப்பதாகவும், இதை வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே அவ்வப்போது பல புதிய சேவைகள் வழங்கிவருகிறது. கடந்த சில ஆண்டுகளில், உணவுப் பொருட்களின் சுகாதாரத்தை மேம்படுத்தவும், பயணிகளுக்கு எளிதாக உணவு கிடைப்பதற்கும் ரயில்வே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்தவகையில் ஏற்கனவே, பயணிகளுக்கு ஆன்லைன் மற்றும் வாட்ஸ் அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதியை ரயில்வே துறை பயணிகளுக்கு வழங்கி வருகிறது.
இ-கேட்டரிங் சேவை வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ரயில்வேயால் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் உணவு ஆர்டர் செய்ய ரயில்வேயில் வாட்ஸ்அப் எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ரயில்வே தனது இ-கேட்டரிங் சேவையை வாடிக்கையாளர்களுக்கு IRCTC மூலம் வழங்குகிறது. எனவே பயணிகள் இந்த இ-கேட்டரிங் சேவை மூலம் தங்களின் உணவை வாட்ஸ்அப் தொடர்பு சேவை மூலம் ஆர்டர் செய்யலாம். இதற்காக பிசினஸ் வாட்ஸ்அப் எண் +91-8750001323 பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் எனப்படும் IRCTCயின் பெயரில் போலி செயலிகள் இருப்பதாகவும், இதை வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. ரயிலில் பயணம் செய்பவர்கள் தங்களின் டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்காக IRCTC செயலியை பயன்படுத்துகின்றனர். இதில் IRCTC Rail Connect போலியாக பல உள்ளதாகவும், இந்த செயலிகள் மக்களை ஏமாற்றுவதை நோக்கமாக கொண்டு செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது. எனவே செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு முன்பு பலமுறை அதன் உண்மை தன்மையை சோதனை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆன்லைன் டிக்கெட் மற்றும் பிற ரயில்வே சேவைகளை பெறும் வாடிக்கையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு தெரிவித்துள்ளது. அதாவது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு Google Play Store, iOS பயனர்களுக்கான Apple App Storeயிலும் , ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ IRCTC Rail Connect மொபைல் ஆப்ஸை டவுண்லோடு செய்து கொள்வது நல்லது என்று தெரிவித்துள்ளனர்.
இதுமட்டும் இல்லாமல் IRCTCயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட https://irctc.co.in இணையதளத்தில் IRCTC வாடிக்கையாளர் சேவையை பெறலாம் என்றும் தெரிவித்துள்ளனர். போலி செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் போது, வாடிக்கையாளர்கள் தங்களின் தகவல் மற்றும் பணத்தை இழக்க நேரிடலாம். எனவே கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.