fbpx

உடலை குளிர்ச்சியாக வைக்க இதையெல்லாம் கண்டிப்பாக சாப்பிடுங்கள்!… இயற்கையான எளிய டிப்ஸ்!…

கோடைக்காலத்தில் வெயிலில் இருந்து உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியாக வைக்க இயற்கையான முறையில் எடுத்துக்கொள்ளவேண்டிய உணவு பொருட்கள் குறித்து இதில் காணலாம்.

பனைமரத்தில் இருந்து கிடைக்கும் அற்புதமான உணவு நொங்கு. இதில் நீர்சத்துக்கள் மட்டுமல்லாமல் கனிம சத்துக்களும் நிறைந்துள்ளன.வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கு நல்லெண்ணெய் ஊறவைத்து தலைக்கு குளிக்க வேண்டும். உடலுக்கும் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது இன்னும் சிறந்தது.இரவில் சாதரணமாக பித்தம் அதிகரிக்கும் தூங்காமல் இருந்தால் பித்தம் இன்னும் அதிகரிக்கும். இரவில் சரியான தூக்கம் அவசியம். பித்தம் அதிகரித்தால் உடல் சூடு அதிகரிக்கும்.

காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு வெந்தயம் விழுங்கி வந்தால் உடல் சூட்டை எளிதாக தணிக்கலாம். இரவில் சிறிதளவு வெந்தயத்தை ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை பருகலாம். வெந்தயம் உடல் சூட்டை தணிப்பதுடன் மலசிக்கல் பிரச்சனைக்கும் தீர்வாக அமைகின்றது. அதிக நீர்சத்துக்களை கொண்ட உணவுகளில் முதன்மையானது தர்ப்பூசணி. உடலில் நீர் வறட்சியை போக்க அதிக நீர்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டும். உடல் வறட்சியை போக்கவும் உடல் உஷ்ணத்தை போக்கவும் தர்ப்பூசணி அற்புதமான பழம். தர்பூசணிக்கு அடுத்து உடலை குளிர்ச்சியாக வைக்கக்கூடிய பலம் முலாம் பழம் தான். இது அதிக குளிர்ச்சியான பழம் என்பதால் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெயில் காலங்களில் அதிகம் கிடைக்க கூடிய வெள்ளரியில் அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வெள்ளரி உடல் சூட்டை குறைப்பதுடன் இதில் அதிகம் உள்ள நார்சத்துக்கள் செரிமானத்தையும் எளிதாக்கும். உடல் சூட்டை தணிப்பதில் இளநீர் முக்கியமானது. சிலருக்கு உடல் இயற்கையாகவே உஷ்ணமாக இருக்கும் அவர்கள் வெறும் வயிற்றில் இளநீர் குடித்து வந்தால் உடல் குளிர்ச்சி அடைவதுடன் புத்துணர்சியாகவும் இருக்கும்.

Kokila

Next Post

அடேங்கப்பா!... 3500 ஏக்கரில் புதிய நகரம்!... எலான் மஸ்கின் மெகா திட்டம் என்ன?

Sat Mar 11 , 2023
உலகின் டாப் பணக்காரரான எலான் மஸ்க், தனது பெயரில் பெயரில் புதிய நகரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக அவர் 3500 ஏக்கர் நிலத்தை வாங்கி இருப்பதாகவும் அமெரிக்காவின் தனியார் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். இவர், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டுவிட்டர் நிறுவன தலைவராக இருக்கிறார்.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், டுவிட்டர் நிறுவனத்தை […]

You May Like