கடுக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் பல்வேறு நோய்களுக்கு தீர்வு கிடைக்கிறது. ஆரோக்கியமாகவும் இளைமையாகவும் வாழ எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
கடுக்காயை அப்படியே சாப்பிட முடியாது. முதலில் அதனை உடைத்து விட்டு சதைகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். கொட்டைகளை பயன்படுத்தக் கூடாது. இந்த சதைப் பகுதிகளை அம்மியினால் இடித்து அல்லது மிக்சி ஜாரில் போட்டு தூள் செய்து, சலித்து ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.கடுக்காய் பொடியை கொண்டு பல் துலக்கி வந்தால் பல்லும், ஈறும் உறுதி பெறுவதோடு, ஈறு வலி எளிதில் நின்றிடும். மேலும் ஈறில் இருந்து வரும் இரத்தத்தை நிறுத்தி விடும். மேலும் வாய் மற்றும் தொண்டையில் இருக்கும் புண்களை எளிதில் ஆற்றிவிடும்.
கடுக்காய்ப் பொடியை சிறிது எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். இரவில் படுப்பதற்கு முன்பு சிறிது கடுக்காய் பொடியை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கலை போக்கும்.மூல நோய் உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொண்டால் அது விரைவில் சரியாகி விடும். மேலும் இந்த பொடியை சிறிது எடுத்து நெய்யில் வறுத்து, உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து சாப்பிட்டு வர வயிற்றுப் புண் குணமாகும். இந்த பொடியை வெந்நீரில் கொதிக்கவைத்து பருகினால் சர்க்கரை நோய் போன்றவை கட்டுப்படும். மேலும், இது உடல் பலவீனத்தைப் போக்கி வலிமை பெறுவதோடு, ஆண்களின் உயிரணு பிரச்னைகளை சரி செய்யவும் உதவுகிறது. இருமல், கை கால் நமச்சல், மார்பு இறுக்கம், வயிற்றுப் பொருமல் ஆகியவைகளையும் விரைவில் சரி செய்யும்