கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முத்ரா கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் தொழில் தொடங்குவோருக்கு அதிக கெடுபிடிகள் எதுவும் காட்டாமல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. எவ்வித அடமானமும் இன்றி இந்த கடன் வழங்கப்படுவது தான் இந்த திட்டத்தில் முக்கியமான அம்சம்.
ஒரு சிறிய நிறுவனத்திற்கான சாத்தியமான வணிக திட்டத்தை கொண்ட தகுதியான நபர்கள் இத்திட்டத்தில் கடன் பெற முடியும். முத்ரா ஒரு மறுநிதியளிப்பு நிறுவனம் என்பதால் அது நேரடியாக கடன் வழங்காது. அதே நேரத்தில் வங்கிகள், பிற கடனளிப்பு நிறுவனங்கள் மூலம் கடன் வழங்க உதவி செய்கின்றன. சுருக்கமாக சொன்னால் வங்கிகள் சிறு தொழில்களுக்கு கடன் வழங்குகின்றன. அதற்கான நிதியை வங்கிகளுக்கு முத்ரா திட்டம் நிதியளிக்கிறது.
இந்நிலையில் தான், முத்ரா கடன் திட்டத்தில் நடக்கும் மோசடிகளை தடுக்க விரைவில், e-KYC முறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கடன் பெறுவோரின் தகுதியை எளிதில் மதிப்பிட்டு, தகுதியான நபர்களுக்கு கடன் கிடைப்பது உறுதி செய்யப்படும். இதற்காக ‘இம்பேக்ட் அசெஸ்மென்ட் ஆஃப் பிஎம் முத்ரா யோஜனா’ என்ற பெயரில் சமீபத்தில் அறிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read More : ’விஜய்யே வெளிய போக சொன்னாலும் நான் போக மாட்டேன்’..!! பக்கபலமா இருப்பேன்..!! 2026 தேர்தலில் போட்டி..!!