மேற்கு நோக்கி நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி நிலவி வருகிறது. இந்த தாழ்வு மையம் தமிழ்நாடு நோக்கி நகர தொடங்கியுள்ளது. அதாவது, வடக்கு தமிழகம் – தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் மழை தீவிரம் அடைந்து வருகிறது. நேற்று இரவில் இருந்தே விட்டு விட்டு மழை பெய்கிறது. ஒரே அடியாக விடாமல் மழை பெய்யாமல், அதே சமயம் ஒரே அடியாக மழை நிற்காமல் விட்டு விட்டு மழை பெய்கிறது.
இப்படி மழை பெய்வதற்கு பின் காரணம் உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னைக்கு அருகில் உள்ளது. வடதமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தாழ்வு மையத்திற்கு முன்னும், பின்பும் நிறைய மழை மேகங்கள் இருக்கும். தாழ்வு மையத்தின் நகர்வு காரணமாக, இந்த மழை மேகங்களும் வடதமிழ்நாட்டை நோக்கி நகரும். ஆனால், தாழ்வு மையம் கரையை கடக்கும் போது கொடுக்கும் மழை அளவிற்கு கனமழையை கொடுக்காது.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கனமழை பெய்யும். நகரின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 – 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு கேரள கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 – 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Read More : புரோ கபடி லீக் தொடர்..!! குஜராத் ஜெயன்ட்ஸ் – பெங்கால் வாரியர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை..!!