விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா செல்லதுரை, சரவண விக்ரம், விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், பூர்ணிமா ரவி, மாயா கிருஷ்ணா, ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா, ரவீனா தாஹா, அக்ஷயா உதயகுமார், வினுஷா தேவி ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இவர்களில் ஒரு சிறந்த கடுமையான போட்டியாளராக முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா இருக்கிறார். அதேபோல், காமெடிக்கும், கலகலப்பிற்கும் பஞ்சமில்லாத ஒருவராக கூல் சுரேஷ் இருக்கிறார். இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவானது ஜோவிகா மேல் ரசிகர்களுக்கு வெறுப்பை உண்டாக்கி இருக்கிறது. அதாவது, நாளை பிறந்தநாள் கொண்டாடும் ஜோதிகாவின் அம்மாவான வனிதாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, ஜோவிகாவை அழைக்கும் போது மகளே என அன்பாக அழைத்தார் கூல் சுரேஷ்.
இதற்கு ஜோவிகா “நான் மகள் அல்ல ஒரு போட்டியாளர்” என கூல் சுரேஷிற்கு முகத்தில் அடித்தால் போல் கூறி இருக்கிறார். ஜோவிகா இப்படி செய்ததை ஒரு சிலர் விமர்சித்து வந்தாலும், ரியாலிட்டி ஷோவில் செண்டிமெண்ட்டுகளில் சிக்காமல் இருப்பதற்காகதான் அவர் அப்படி சொன்னார் என ஒரு சிலர் அவரை ஆதரித்தும் வருகின்றனர்.
வீடியோவை காண: https://x.com/IdamPorul/status/1709852523232981472?s=20