fbpx

’திருமணத்திற்கு பிறகு இப்படி வந்து சொன்னால் என்ன செய்வது’..? ’செட் ஆகாது’..!! இருவரும் பிரிய இதுதான் காரணம்..!!

நடிகர் ராமராஜன் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு அருண் மற்றும் அருணா என்ற 2 குழந்தைகள் இருந்த நிலையில், ராமராஜனும் நளினியும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இதுகுறித்து பல வருடம் கழித்து ராமராஜன் பேசியிருக்கிறார். ஒரே துறையில் இருக்கும் பலர் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கம் தான். அதிலும் பலர் நம்முடைய துறையை பற்றி நம்முடைய துணை ஏற்கனவே புரிந்து வைத்திருப்பார். அதனால் நம்முடைய வாழ்க்கை நன்றாக இருக்குமென நினைத்து திருமணம் செய்கின்றனர்.

ஆனால், ஒரு சில வருடங்களிலேயே புரிதல் சரியாக இல்லாததால் கருத்து வேறுபாடு வந்து பிரிந்து போகின்றனர். அந்த வகையில், நடிகை நளினி மற்றும் ராமராஜனும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இருவருமே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்நிலையில், சமீபத்தில் ராமராஜன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டியளிக்கையில், ”நளினி திருமணத்திற்கு பிறகு நடிக்கப் போக மாட்டேன் என்று சத்தியம் செய்து சொல்லியிருந்தார். அதனால் தான் நான் திருமணத்திற்கு சம்மதித்தேன். ஆனால், திருமணத்திற்கு பிறகு நான் நடிக்க போறேன் என்று சொன்னார். அது எனக்கு திருப்தியாக இல்லை.

என்னுடைய பெற்றோரும் நளினி நடிப்பதை விரும்பவில்லை. திருமணத்திற்கு முன்பே நான் நடிப்பேன் என்று சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், திருமணத்திற்கு பிறகு நான் நடிக்கப் போகிறேன் என்று அவர் சொல்லியது எனக்கு ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் சினிமாவில் எப்படி எனக்கு பிடிக்கவில்லை என்றால் செய்ய மாட்டேனோ அதுபோலத்தான் திருமண வாழ்க்கையிலும் எனக்கு அந்த நேரத்தில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் நாங்கள் விவாகரத்து செய்து விட்டோம். எங்களுக்கு விவாகரத்தாகி 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அவர் ஏதாவது கேட்டால் நான் பதில் சொல்வேன் அவ்வளவுதான். எங்களுக்குள் இப்போது வேறு எதுவும் இல்லை” என்று சொல்லியுள்ளார்.

Read More : ’அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் பரிசோதனை’..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு..!!

English Summary

Actress Ramarajan recently gave an interview to a YouTube channel about her breakup with Nalini.

Chella

Next Post

பெண்கள் பிரா அணிவது அவசியமா? மருத்துவர்கள் சொல்வது என்ன? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Mon Aug 12 , 2024
Many studies have shown that wearing a bra can cause many health problems for women.

You May Like