ராஜஸ்தான் மாநிலம் பந்தி என்ற மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ் வைராகி. இவர், தனது மகனுக்கு அண்மையில் திருமணம் செய்து வைத்தார். இதையடுத்து, ரமேஷ் தனது மருமகள் மீது அதிக பாசம் வைத்திருந்ததாகவும், அவருடன் அடிக்கடி அன்பாக பேசியதாகவும் தெரிகிறது. இந்நிலையில், பவன் மனைவிக்கு அண்மையில் குழந்தை பிறந்த நிலையில், திடீரென்று அவர் 6 மாத குழந்தையை விட்டுவிட்டு மாமனார் ரமேஷ் வைராகியுடன் வீட்டை விட்டு ஓடி விட்டார்.
இதனால், அதிர்ந்துபோன கணவர் பவன், தற்போது காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். தன்னிடம் பொய் கூறிவிட்டு தனது தந்தை ரமேஷுடன் மனைவி சென்று விட்டதாக பவன் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.