fbpx

’என் அப்பா அந்த பழக்கத்திற்கு அடிமை’..!! ’நடுத்தெருவில் நின்றேன்’..!! ’குடும்பமே எதிரியாக மாறின’..!! நீலிமா ராணி வேதனை..!!

சுமார் 31 ஆண்டுகளாக நடிகையாக பயணித்து வரும் நீலிமா ராணி பல திரைப்படங்களில் தங்கையாக, அக்காவாக, நாயகியின் தோழியாக நடித்துள்ளார். இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ருத்ரன் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் ஏற்று அவர் நடித்திருந்தார். நடிகர், நடிகைகள் என்றாலே லட்சத்தில், கோடிகளில் சம்பளம் பெறுபவர்கள். ஆகவே, அவர்களுடைய வாழ்க்கை மிகப்பெரிய சொகுசான வாழ்க்கை என்று நம்மில் பலருக்கு உள்ள அந்த ஒரு பிம்பத்தை உடைப்பது போல அமைந்து இருந்தது அண்மையில் நீலிமா ராணி அளித்திருந்த ஒரு பேட்டி.

அந்த பேட்டியில், “நான் தமிழக மக்களை பொறுத்தவரை ஒரு நல்ல நடிகையாக திகழ்ந்து வருகிறேன். ஆனால், என் குடும்பத்தை பொறுத்தவரை நான் ஒரு “தங்க முட்டையிடும் வாத்து” அவ்வளவுதான். என் குடும்ப சூழல் காரணமாகத் தான் சினிமாவில் நடிக்க சென்றேன். தம்பியின் படிப்பு, குடும்ப செலவு என்று என் சம்பாத்தியத்தில் தான் குடும்பம் நகர்ந்தது.

எனக்கு திரைப்படம் மற்றும் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது மாதத்திற்கு லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெற்று வந்தேன். பல குறுகிய காலத்தில் ஓய்வின்றி உழைத்து பெரும் பணம் சேர்த்தேன். ஆனால், என் தந்தைக்கு இருந்த ஒரு கெட்ட பழக்கத்தின் காரணமாக என் வாழ்க்கை அப்படியே தலைகீழாக மாறியது. பல லட்சங்களை சம்பாதித்த நான் பல வருடங்கள் கழித்து என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தபோது நான் சம்பாதித்த மொத்த பணத்தையும் இழந்து விட்டு நிற்கிறேன் என்பது தெரியவந்தது.

என் தந்தைக்கு சூதாட்டத்தின் மீது அதிக ஆர்வம் உண்டு. இதனால், நான் கஷ்டப்பட்டு உழைத்த மொத்த பணத்தையும் சூதாட்டத்தில் விட்டு, இறுதியில் அந்த சூதாட்டமே அவரை உயிரை எடுத்துக் கொண்டது. கையில் பணம் இல்லை, கடனுக்கு மேல் கடன், செய்வதற்காக தாயோடு நடுத்தெருவில் நின்றேன். வாடகை வீட்டில் குடிபுகுந்தேன், மீண்டும் வைராக்கியத்தோடு உழைக்க துவங்கினேன். இன்று அந்த வாடகை வீட்டையே வாங்கும் அளவிற்கு மீண்டும் உயரத்திற்கு வந்திருக்கிறேன். எனக்கு வெளியில் இருந்து எப்பொழுதும் எந்த கஷ்டங்களும் வந்ததில்லை. 31 ஆண்டுகளாக திரைத்துறையில் நடித்து வரும் எனக்கு என் குடும்பமே எதிரிகளாக மாறியது வேதனை அளிக்கிறது“ என்றார்.

Chella

Next Post

மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!

Thu Dec 7 , 2023
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவில் (ஐபி) 995 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் புலனாய்வு பிரிவில், மத்திய புலனாய்வு அலுவலரின் உதவியாளர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஏசிஐஓ, கிரேடு – 2/செயலர் உள்ளிட்ட பணிகளுக்கு 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, சம்பளம் மற்றும் இதர […]

You May Like