கணவன்-மனைவி இருவருமே காவல்துறையில் பணியாற்றி வந்த நிலையில், கள்ள உறவுக்கு இடையூறாக இருந்ததால் கூலிப்படை உதவியுடன் கணவன் உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார் பெண் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். போலீஸ் ஏட்டுவான இவர் பணி காலத்தின் போது குற்ற செயல்களில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டார். இவரின் மனைவி சித்ரா சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிந்து வந்திருக்கிறார். இவர்களுக்கு 19 வயதில் ஜெகதீஷ் குமார் என்கிற மகன் இருக்கிறார். இவர்கள் ஊத்தங்கரை கவர்னர் தோப்பு பகுதியில் வசித்து வந்துள்ளார்கள். இந்நிலையில், திடீரென்று செந்தில்குமார் மாயமாகியுள்ளார். இதனால், அவரது தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், செந்தில்குமாரின் செல்போன் அவரது மகனின் செல்போன் இவர்களது கார் டிரைவர் கமல்ராஜ் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்திருக்கிறது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை விசாரணைக்கு அழைத்துள்ளார்கள். யாரும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்கள். அப்போதுதான் செந்தில்குமார் கொலை செய்து ஆற்றில் உடலை வீசி விட்டதாக போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார்கள். அதன் பின்னர் இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை குறித்து அவரது மனைவி சித்ராவிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தபோது, கார் டிரைவர் கமல்ராஜ், ஜெகதீஷ் குமார் ஆகிய இரண்டு பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். செந்தில்குமாரை கொலை செய்து உடலை கல்லை கட்டி ஊத்தங்கரை பகுதியில் உள்ள கிணற்றில் வீசியதாக சொல்லியுள்ளனர். அதன் பின்னர் செந்தில்குமார் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. ஜெகதீஷ் குமார் கமல்ராஜ் ஆகியோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சித்ரா கூலிப்படை ஏவி கொலை செய்தது தெரியவந்துள்ளது.

குற்றச்செயல்களில் ஈடுபட்டு பணி நீக்கம் செய்யப்பட்டதால் 2008ஆம் ஆண்டு காரை வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார் கணவர். பணிபுரிந்த காலத்தில் இருவரும் சேர்ந்து ஒரு வீடு வாங்கினோம். என் கணவரிடம் கமல் ராஜ் என்பவர் கார் டிரைவராக வேலை பார்த்தார். முதலில் அவருடன் நான் சாதாரணமாக பழகினேன். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. என் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் கமல் ராஜ் நானும் உல்லாசமாக இருந்து வந்தோம். கமல்ராஜ் அடிக்கடி எனது வீட்டுக்கு வந்து சென்றது கணவருக்கு தெரிந்துவிட்டது. எங்களை கண்டித்தார். ஒரு நாள் நாங்கள் தனிமையில் இருந்ததை கணவர் பார்த்து விட்டார். அதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் உள்ள பொருட்களை போட்டு உடைத்தார். இதனால் கள்ள உறவுக்கு இடையூறாக இருக்கும் கணவரே கூலிப்படை ஏறி கொலை செய்தோம் என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.