5 ஆண்டுகளாக இளம்பெண்ணை பலாத்காரம் செய்து வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி தன்னை 5 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்ததாக இளைஞர் ஒருவர் மீது இளம்பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்து கடந்த 5 ஆண்டுகளாக தன்னை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தற்போது திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டதாகவும் புகார் அளித்துள்ளார். மேலும், அந்த இளைஞர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார். அந்த இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், குற்றம்சாட்டப்பட்ட அந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் இது குறித்துப் பேசிய போலீஸ் அதிகாரி ராஜேஷ் மிஸ்ரா, “கைது செய்யப்பட்ட நபர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை, துஷ்பிரயோகம், கொலை மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கிறது. புகாரளித்த பெண், மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.