fbpx

’என் நீண்ட கால நண்பர்’..!! ’அவரது மறைவு எனக்கு மிக வருத்தம்’..!! நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்..!!

திமுக-வின் கொள்கைப் பரப்பு பத்திரிகையான முரசொலி பத்திரிகையில், சுமார் 50 ஆண்டுகளாக நிர்வாக ஆசிரியராக பணியாற்றியவர் முரசொலி செல்வம் (84). இவர், வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் மகள் செல்வி. இவரின் கணவர் தான் முரசொலி செல்வம். இவர், பல்வேறு திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். முரசொலி நாளிதழில் சிலந்தி என்ற தலைப்பில் நீண்ட ஆணித்தரமான கட்டுரைகளை முரசொலி செல்வம் தான் எழுதி வந்தார். செல்வி – முரசொலி செல்வம் தம்பதியினருக்கு எழிலரசி ஜோதிமணி என்ற மகள் இருக்கிறார்.

இந்நிலையில், முரசொலி செல்வத்தின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ”முரசொலி செல்வம் என்னுடைய நீண்ட கால நண்பர். அருமையான மனிதர். அவருடைய மறைவு எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” என தெரிவித்துள்ளார்.

Read More : காதலனுடன் உல்லாசம்..!! கர்ப்பமானதால் அதிர்ச்சி..!! கருவை கலைத்த +2 மாணவி மரணம்..!!

English Summary

Actor Rajinikanth condoles death of Murasoli Selvam

Chella

Next Post

விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரவை கொப்பரை விற்பனை...! முழு விவரம்

Fri Oct 11 , 2024
Sale of Arava copra at minimum support price to farmers

You May Like