கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ”ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்துவது காலத்தின் கட்டாயம். ஆனால், 2024ஆம் ஆண்டில் அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரு காலத்தில் திமுகவின் கொள்கையாக இருந்தது. ஒரே நாடு ஒரே தேர்தல் 2024 தேர்தலில் நிச்சயம் வராது.
எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. கோவை தொகுதியில் நான் போட்டியிட மாட்டேன். எனக்கு தலைவராக பணிகள் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது. அதனால் கண்டிப்பாக தேர்தலில் போட்டியிட மாட்டேன். இளைஞர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள். என் திருமணமும் காதல் திருமணம் தான். காதல் திருமணம் திமுக – காங்கிரஸ் போல் இருக்கக் கூடாது. மோடி- பாஜக போல் இருக்க வேண்டும்” என்றார்.