தமிழக சினிமா வரலாற்றில் தற்போது வரை சூப்பர் ஸ்டார் என்றாலே நினைவுக்கு வருபவர் ரஜினிகாந்த்தான். ஆனால் சமீப காலமாக நடிகர் விஜய் இந்த பட்டத்துக்கு போட்டி போட்டு வருவதாக அவ்வப்போது கிசுகிசுக்கள் எழும் சூழலில், அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என விஜய் ரசிகர்கள் போஸ்டரும் ஒட்டி வந்தனர்.
இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஜெயிலர் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கழுகு காகம் என குட்டி கதை கூறிய ரஜினி, விஜயை தான் காகம் எனக் கூறுகிறார் என்றும் ஆங்காங்கே பேச்சுக்கள் எழுந்தன. இந்த நிலையில் தற்போது மதுரையில் விஜய் ரசிகர்கள் “என்னுடைய உச்சம் உனக்கு ஏன் அச்சம்?” என்ற வசனத்தோடு ரஜினி மற்றும் விஜயின் படங்களை அச்சிட்டு நோட்டீசுகளை ஒட்டி உள்ளனர். ஜெயிலர் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில், ரஜினிகாந்த் கூறிய கதைக்கு பதில் அளிக்கும் விதமாகவே விஜய் ரசிகர்களால் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.