fbpx

தேர்தல் முறைகேடு : ஆங் சான் சூச்சிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை.. மியான்மர் நீதிமன்றம் அதிரடி

மியான்மர் நாட்டின் முன்னாள் அரசியல் தலைவர் ஆங்சான் சூச்சிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

மியான்மரின் தேசிய ஜனநாயக லீக் கூட்டணி 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறப்பட்டது.இதை அடுத்து ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவத்தினர் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றினர். இதையடுத்து ஆங்சான் சூச்சி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். 76 வயதாகும் சூச்சி தன்மீதான புகார்களுக்கு அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார்.

ராணுவக்குழுவினர் அளித்த புகாரில் சூச்சி தலைமையிலான குழு 2000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இரட்டை வாக்குகள் அளித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் . 3.7 கோடி பேர் பதிவு செய்திருந்தனர். அதில் , 75 சதவீத வாக்களர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்திருந்ததாக தேர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது.

சூச்சி ஏற்கனவே ஊழல் உள்ளிட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ராணுவத்தினர் அளித்த புகாரின் பேரில் ஊழல் வழக்கு புதிதாக அவர் மீது தாக்கலானது. அவரது தாய் டா கின் கியி-ன் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவதாக குற்றச்சட்டுகள் எழுந்தது. 2021ம் ஆண்டு சூச்சி அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

ராணுவாத்திற்கு எதிராக கிளர்ச்சியை தூண்டுவது , கொரானா விதிகளை மீறி செயல்பட்டது, சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டது என இவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தது. இது தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் ஏற்கனவே 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து இருந்தது. தற்போது இந்த வழக்கிலும் சூச்சிக்கு கூடுதலாக 3 ஆண்டுகள் தண்டனை கிடைத்துள்ளது.

ஆங்சான் சூச்சிமி யான்மிரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவர் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Post

கர்நாடகாவில் சரசரவென ஏறும் பாலியல் புகார்கள்

Fri Sep 2 , 2022
சுதந்திரமாக விசாரணை நடத்த முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவு கர்நாடகாவில் பாலியல் புகார்கள் தொடர்பாக காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட்டு விசாரணை நடத்தலாம் என்று கர்நாடக மாநில முதலமைச்சர்  பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். மங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் , ’’ கர்நாடக மாநிலத்தில் பாலியல் புகார்கள் அதிகமாக வருகின்றது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரிக்க முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. லிங்காயத் சிவமூர்த்தி மற்றும் முருக சரணு ஆகியோர் மீது […]

You May Like