fbpx

சென்னையில் அதிகரிக்கும் மர்மகாய்ச்சல்!… மக்கள் அச்சம்!… சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னையில் காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடல் சோர்வு, மாலைநேர குளிர் பாதிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதால், இவ்வகை பாதிப்புகள், டெங்கு, டைப்பாய்டு, மலேரியா உள்ளிட்ட பாதிப்புகளாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் தமிழக அரசு மற்றும் மாநகராட்சி தொடர்ந்து அலட்சியம் காட்டினால், காய்ச்சல் அதிகளவில் பரவக்கூடும் என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது, தற்போது வரை, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சாதாரண காய்ச்சல் தான் என கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில், டெங்கு, டைப்பாய்டு ஆகிய காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவ்வகை காய்ச்சலை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளனர். மேலும், பொதுமக்கள், தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களில், துாய்மையாக பாராமரிக்க வேண்டும் என்றும் நன்னீரை எப்போதும் மூடி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

Kokila

Next Post

செப்: 19-ம் தேதிக்குள் ரூ.1 கோடி திருப்பி செலுத்த வேண்டும்...! சிம்புவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...! ஏன் தெரியுமா...?

Wed Aug 30 , 2023
வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு 1 கோடியை திருப்பிச் செலுத்த செப்டம்பர் 19-ம் தேதிக்குள் உத்தரவாதம் அளிக்க நடிகர் சிம்புவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் சிம்பு நடிக்கவிருந்த ‘கொரோனா குமார்’ படத்திற்காக அவருக்கு 1 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகவும், அந்தப் படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க, அவருக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் தாக்கல் […]

You May Like